For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏமாத்திட்டாங்க.. தோனி அவுட்டே இல்லை.. அம்பயர் முடிவு தப்பு.. கதறும் தல ரசிகர்கள்.. என்னாச்சு?

Recommended Video

IPL 2019 FINALS CHENNAI VS MUMBAI | தோனி அவுட் இல்லை! கதறும் தோனி ரசிகர்கள்

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெறும் 1 ரன்னில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது தோனியின் விக்கெட் ரன் அவுட் தான்.

ஆனால், அது சர்ச்சைக்குரிய வகையில் அமைந்தது. அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என தோனி ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். என்ன நடந்தது?

தோனி பேட்டிங்

தோனி பேட்டிங்

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 149 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி மூன்று விக்கெட்களை இழந்த பின் தோனி களமிறங்கினார். அவர் 2 ரன்கள் எடுத்து இருந்த போது, ஹர்திக் பண்டியா பந்தை தட்டி விட்டு ஒரு ரன் ஓடினார்.

ஓவர் த்ரோவால் வந்த வினை

ஓவர் த்ரோவால் வந்த வினை

மலிங்கா பந்தை எடுத்து எறிந்த போது, ஓவர் த்ரோ ஆனது. அதை பயன்படுத்தி இரண்டாவது ரன் ஓடினார் தோனி. அப்போது பந்தை எடுத்த இஷான் கிஷன் நேராக ஸ்டம்ப்பில் அடிக்க, ரன் அவுட் கேட்டனர் மும்பை வீரர்கள். பின்னர், ரீப்ளே பார்க்கப்பட்டது.

அவுட் கொடுத்தார்

அவுட் கொடுத்தார்

ரீப்ளேவில், தோனி க்ரீஸ்ஸின் நுனியில் பேட்டை வைக்கவும், பந்து ஸ்டம்ப்பில் படவும் சரியாக இருந்தது. பல கேமரா கோணங்களில் பார்த்த பின்னரும், தெளிவான முடிவுக்கு வர முடியாத நிலையில், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார்.

இது அவுட்டே இல்லை

இது அவுட்டே இல்லை

இது போன்ற சந்தேகம் ஏற்படுத்தும் சூழலில், பேட்ஸ்மேனுக்கு சாதகமாகத் தான் அம்பயர்கள் முடிவு எடுப்பார்கள். ஆனால், இங்கே தோனிக்கு எதிராக அவுட் கொடுக்கப்பட்டது. இதை தோனி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. "ஏமாத்திட்டாங்க.. இது அவுட்டே இல்லை.." என சமூக வலைதளங்களில் கதறி வருகிறார்கள் தோனி ரசிகர்கள்.

Story first published: Monday, May 13, 2019, 1:40 [IST]
Other articles published on May 13, 2019
English summary
IPL 2019 MI vs CSK : Benefit of doubt not given to Dhoni in the controversial run out
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X