For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மண் அள்ளிப் போட்டு மூடிய உத்தப்பா.. புஸ் ஆன ரஸ்ஸல் வெடி.. பரிதாப தினேஷ் கார்த்திக்! #MIvsKKR

Recommended Video

IPL 2019: Kolkata vs Mumbai: காற்றில் பேட்டை விட்டு துழாவிய உத்தப்பா!.. டி20யில் மெய்டன் ஓவர்-வீடியோ

மும்பை : 2019 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் எந்த தடங்கலும் இன்றி மும்பை அணிக்கு வெற்றியை தாரை வார்த்தது கொல்கத்தா.

1
45932

முக்கியமான இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், கொல்கத்தா அணி பிளே-ஆஃப் செல்லும் என்ற நிலை. மும்பை ஏற்கனவே, பிளே-ஆஃப் சென்றுவிட்ட நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் ஆடியது.

கேதார் ஜாதவ்வுக்கு இனி ஐபிஎல் இல்லை.. உலகக்கோப்பையும் சந்தேகம் தான்.. பதறும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு? கேதார் ஜாதவ்வுக்கு இனி ஐபிஎல் இல்லை.. உலகக்கோப்பையும் சந்தேகம் தான்.. பதறும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

கிறிஸ் லின் அதிரடி

கிறிஸ் லின் அதிரடி

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை பீல்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் துவக்க வீரர் கிறிஸ் லின் அதிரடியாக ஆடி 41 ரன்கள் சேர்த்தார். ஷுப்மன் கில் 9 ரன்களில் வெளியேறினார்.

உத்தப்பா

உத்தப்பா

மூன்றாவது வீரராக களமிறங்கிய உத்தப்பா, பந்துகளை அடிக்க முடியாமல் திணறினார். தான் சந்தித்த 47 பந்துகளில் 26 பந்துகளை அடிக்க முற்பட்டு தோல்வி அடைந்தார். இடையே ஒரு மெய்டன் ஓவர் வேறு ஆடினார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

உத்தப்பா ஒருபுறம் பேட்டை தடவிக் கொண்டு இருக்க, மற்ற வீரர்கள் அடித்த ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்து வந்தனர். தினேஷ் கார்த்திக் 3, ரஸ்ஸல் 0, நிதிஷ் ராணா 26 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் ஆட்டமிழந்த உத்தப்பா 47 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

ரஸ்ஸல் புஸ்!

ரஸ்ஸல் புஸ்!

பெரிதும் எதிர்பார்கப்பட்ட ரஸ்ஸல் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா 133 ரன்கள் மட்டுமே சேர்த்து பரிதாபமாக காட்சி அளித்தது. உத்தப்பா நிதானமாக தடுமாறி ஆடி, கொல்கத்தா அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பில் மண் அள்ளிப் போட்டார்.

எளிதான வெற்றி

எளிதான வெற்றி

மும்பை அணி 134 ரன்கள் என்ற எளிய இலக்கை 16.1 ஓவரில், 9 விக்கெட்கள் வித்தியாசத்தில், எட்டி அபார வெற்றி பெற்றது. டி காக் 30, ரோஹித் சர்மா 55*, சூர்யகுமார் யாதவ் 46* ரன்கள் எடுத்தனர்.

தினேஷ் கார்த்திக் பரிதாபம்

தினேஷ் கார்த்திக் பரிதாபம்

கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சில் ஓவருக்கு 15 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். எந்த கொல்கத்தா வீரராலும், இந்தப் போட்டியில் சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியவில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக் செய்வதறியாது நின்றது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Story first published: Monday, May 6, 2019, 0:28 [IST]
Other articles published on May 6, 2019
English summary
IPL 2019 MI vs KKR : Mumbai Indians vs Kolkata Knight Riders 56th Match report
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X