For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 பிளேயிங் லெவன்.. தோனி இதுவரை இறக்காத புதிய டீம்.. டெல்லியை வீழ்த்த சிஎஸ்கே போடும் அசத்தல் வியூகம்!

துபாய்: நாளை டெல்லிக்கு எதிராக நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியில் யாரெல்லாம் விளையாடுவார்கள் என்று கேள்விகள் எழுந்துள்ளது. அணியில் என் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

2020 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி வேகம் எடுத்துள்ளது. முதல் பாதி ஆட்டத்தில் சிஎஸ்கே மோசமாக சொதப்பிய நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தை சிஎஸ்கே வெற்றியோடு தொடங்கி உள்ளது.

ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கேவின் வெற்றி அணிக்கு பெரிய அளவில் பலம் மற்றும் உத்வேகம் கொடுத்துள்ளது. நாளை சிஎஸ்கே டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது.

என்ன அணி

என்ன அணி

இந்த நிலையில் நாளை சிஎஸ்கே எந்த மாதிரியான அணியுடன் களமிறங்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவில் முழு நேர பேட்ஸ்மேன்கள் குறைவாகவே இருந்தனர். சிஎஸ்கேவில் மொத்தம் 7 பவுலர்கள் இருந்தனர். சாகர், ஷர்துல் தாகூர், பிராவோ, கரன் சர்மா, பியூஸ் சாவ்லா, ஜடேஜா, சாம் கரன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

அடுத்த மேட்ச்

அடுத்த மேட்ச்

நாளை டெல்லி அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. டெல்லி அணியின் பேட்டிங், பவுலிங் எல்லாமே மிகவும் வலிமையாக இருக்கிறது. இதனால் டெல்லியை எதிர்கொள்ள சிஎஸ்கே சிறப்பான திட்டங்களை வகுக்க வேண்டும். சிஎஸ்கே அணியில் என் ஜெகதீசன் மற்றும் பியூஸ் சாவ்லா (அல்லது கரன் சர்மா) ஆகிய இரண்டு பேரில் நாளை யார் விளையாடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு அணிகள்

இரண்டு அணிகள்

கேப்டன் தோனி இரண்டு விதமான அணிகளை மனதில் வைத்துள்ளார் என்று கூறுகிறார்கள். 2 விதமான பிளெயிங் லெவனை சிஎஸ்கே அணி மனதில் வைத்துள்ளது. முதல் அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி. அதாவது சாம் கரன், டு பிளசிஸ், வாட்சன், ராயுடு, தோனி,ஜடேஜா, பிராவோ, பியூஸ் சாவ்லா, சாகர், ஷர்துல் தாகூர், கரன் சர்மா ஆகியோர் ஆடுவார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் டாஸ் வென்று சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தால் மட்டுமே இந்த அணியை இறக்குவார்கள். சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தால் பெரிய அளவில் மிடில் பேட்டிங் மீதான அழுத்தம் இருக்காது. கடந்த மேட்ச் போல என் ஜெகதீசன் இல்லாமலே ஆட முடியும். மிடில் ஆர்டரில் ஜெகதீசன் தேவை இல்லை. ஆனால் சேசிங் செய்யும் டெல்லியை கட்டுப்படுத்த பவுலிங் ஆப்ஷன் தேவை.

அடுத்த மேட்ச்

அடுத்த மேட்ச்

இதனால் நாளை நடக்கும் மேட்சில் சிஎஸ்கே பேட்டிங் எடுத்தால் பியூஸ் சாவ்லா, கரன் சர்மா இருவரும் அணியில் இருப்பார்கள். ஜெகதீசன் அணியில் இருக்க மாட்டார். இன்னொரு பக்கம் சென்னை அணி சேஸிங் செய்தால் அணிக்குள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வலுவாக இருக்க வேண்டும். ஒப்பனர்கள் சொதப்பினால் சேஸிங்கில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்படுவார். இதனால் சிஎஸ்கே சேசிங் செய்தால் ஜெகதீசனை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது.

டெல்லிக்கு எதிராக மேட்ச்

டெல்லிக்கு எதிராக மேட்ச்

டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே சேசிங் செய்வதாக இருந்தால் தோனி பின்வரும் டீமை அறிவிக்க வாய்ப்புள்ளது. சாம் கரன், டு பிளசிஸ், வாட்சன், ராயுடு, என் ஜெகதீசன், தோனி,ஜடேஜா, பிராவோ, சாகர், ஷர்துல் தாகூர், பியூஸ் சாவ்லா ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது. இந்த அணி இதுவரை சிஎஸ்கேவில் ஆடியது இல்லை.

டாஸ்

டாஸ்

ஜெகதீசன், சாவ்லா ஒரே அணியில் இடம்பெற்றது இல்லை. இதனால் இந்த அணி புதியதாக இருக்கும். சேசிங்கின் போது இந்த அணி உதவும். மொத்தத்தில் டாஸ் வெல்வதை பொறுத்தே சிஎஸ்கேவின் முடிவு இருக்கும் என்கிறார்கள். சேசிங் வந்தால் சிஎஸ்கே ஒரு அணியை அறிவிக்கும். பேட்டிங் வந்தால் வேறு அணியை அறிவிக்கும் என்கிறார்கள்.

Story first published: Friday, October 16, 2020, 20:35 [IST]
Other articles published on Oct 16, 2020
English summary
IPL 2020: CSK has two teams in the mind, What will be the playing eleven for tomorrow match?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X