For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குட்டி பசங்க போட்ட மாஸ்டர் பிளான்.. தோனியே "அதை" எதிர்பார்க்கவில்லை.. களத்தில் நடந்த பரபர சம்பவம்!

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று தோனியே எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. ஸ்பின் பவுலிங் பிட்சில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் தேர்வு செய்தது.

ராஜஸ்தான் அணியின் பவுலிங் ஆர்டர் மிகவும் வலிமையாக உள்ளது. ஐபிஎல் அணிகளில் மிகவும் வலிமையான பவுலிங் ஆர்டர் கொண்ட அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் இருக்கிறது.

சிஎஸ்கே திட்டம்

சிஎஸ்கே திட்டம்

அதிலும் ராஜஸ்தான் அணியில் ஸ்பீட் பவுலிங்தான் மிகவும் வலிமையாக இருக்கிறது. இதனால் கார்த்திக் தியாகி, ஜோப்ரா ஆர்ச்சர் என்று இரண்டு ஸ்பீட் பவுலர்களை எதிர்கொள்ளவே இன்று சிஎஸ்கே திட்டமிட்ட இருந்தது. இவர்கள் இருவரும்தான் இதுவரை ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இவர்களை எதிர்கொள்ளவே சிஎஸ்கே திட்டங்களை வகுத்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

சிஎஸ்கே நினைத்தது போலவே இன்று இவர்கள் இருவருமே சிறப்பாக பந்து வீசினார்கள். டு பிளசிஸ் ஷார்ட் பந்துகளில் திணறுவார் என்பதால் சரியாக அவர் வந்த போது ஜோப்ரா ஆர்ச்சர் ஷார்ட் பந்துகளை போட்டார். இதை கணிக்க தவறிய டு பிளசிஸ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதற்கு பின் வாட்சனும் அவுட் ஆனார்.

வாட்சன் அவுட்

வாட்சன் அவுட்

ஆப் சைடில் வீசினால் வாட்சன் அடிக்க மாட்டார் என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பீல்டிங் நிறுத்தி இருந்தார் கார்த்திக் தியாகி. முதல் இரண்டு பந்துகளை தியாகி உள்ளே போட அதில் பவுண்டரி சென்றது. கடைசி பந்தை வெளியே போட்டார். இதை கணிக்க தவறிய வாட்சன் திவாதியாவிடம் கேட்ச் கொடுத்தார்.

ஷாக்

ஷாக்

ராஜஸ்தானுக்கு எதிராக ஸ்பீட் பவுலிங்கை எதிர்கொள்ள மட்டுமே சிஎஸ்கே திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் இன்று ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலிங்கும் சிறப்பாக ஆடியது.ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் திவாதியா இரண்டு பேருமே அதிரடி காட்டினார்கள்.

அதிரடி

அதிரடி

கோபால், திவாதியா இரண்டு பேருமே மாற்றி மாற்றி கூக்ளி பந்துகளாக போட்டனர். இவர்களின் கூக்ளியை சிஎஸ்கேவின் ராயுடு, சாம் கரன் இரண்டு பேராலும் கணிக்க முடியவில்லை. இரண்டு பேருமே அடுத்தடுத்த கூக்ளி பந்துகளில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். சிஎஸ்கே ராஜஸ்தானின் ஸ்பீட் அட்டாக்கிற்கு தயார் ஆன போது ராஜஸ்தான் ஸ்பின் அட்டாக் மூலம் சிஎஸ்கேவின் டாப் ஆர்டரை காலி செய்துள்ளது.

காலி செய்தது

காலி செய்தது

அதிலும் சிஎஸ்கே டாப் ஆர்டர் விக்கெட்டுகளை எடுத்த மூன்று வீரர்கள் மிகவும் இளமையான வீரர்கள். இன்று சிறப்பாக பந்து வீசிய தியாகி 19 வயது நிரம்பியவர். ஷ்ரேயாஸ் கோபால் 26 வயது நிரம்பியவர். அதேபோல் ஆர்ச்சரும் 25 வயது நிரம்பியவர்தான். ராகுல் திவாதியா மட்டுமே 27 வயது நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கேவின் டாடி ஆர்மியை ராஜஸ்தானின் யூத் ஆர்மி காலி செய்துள்ளது.

Story first published: Monday, October 19, 2020, 20:54 [IST]
Other articles published on Oct 19, 2020
English summary
IPL 2020: CSK top order fails against Rajasthan Royal bowling plan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X