For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக செயல்பட்டு வந்த நிலையில், அதிலும் மிக மோசமான தோல்வியாக அமைந்தது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி.

10 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் படுதோல்வி அடைந்தது.

சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் மும்பை அணியின் அதிரடி பந்துவீச்சு தான். அதிலும் ட்ரென்ட் போல்ட் மட்டுமே 4 விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.

அவமானம்.. அழுத்தம்.. சத்தமே இல்லாமல் நிகழ்ந்த வரலாற்று சாதனை.. சிஎஸ்கே ஜோடி!அவமானம்.. அழுத்தம்.. சத்தமே இல்லாமல் நிகழ்ந்த வரலாற்று சாதனை.. சிஎஸ்கே ஜோடி!

சிஎஸ்கே பேட்டிங்

சிஎஸ்கே பேட்டிங்

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. பிளே-ஆஃப் ஓவர்களில் மட்டும் 5 விக்கெட்களை இழந்து தவித்தது சிஎஸ்கே அணி. 20 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. சாம் கர்ரன் மட்டுமே 52 ரன்கள் எடுத்து அணிக்கு ஆறுதலாக இருந்தார்.

ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்

ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்

மும்பை அணியின் வேகப் பந்துவீச்சு தான் துவக்கத்தில் விக்கெட்களை அள்ளியது. மும்பை அணியில் ட்ரென்ட் போல்ட் சிறப்பாக செயல்பட்டார். அவர் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவர் வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

சிறந்த பந்துவீச்சு

சிறந்த பந்துவீச்சு

இதுவே ஐபிஎல் தொடரில் அவரின் சிறந்த பந்துவீச்சாகும். முன்னதாக 2015ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தது சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதை சிஎஸ்கே போட்டியில் முறியடித்துள்ளார்.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் சேஸிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 68, டி காக் 46 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

Story first published: Saturday, October 24, 2020, 0:44 [IST]
Other articles published on Oct 24, 2020
English summary
IPL 2020 CSK vs MI : Trent Boult registered his best IPL bowling
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X