For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு காரணம்தானா?.. சொதப்ப போகும் தோனியின் "அந்த" பார்முலா.. உடனே மாற்றுங்கள்.. சிக்கலில் சிஎஸ்கே!

துபாய்: சிஎஸ்கே அணியில் பிராவோவை டெத் ஓவர்களில் பயன்படுத்த வேண்டுமா? அல்லது இம்ரான் தாஹிரை டெத் ஓவர்களில் பயன்படுத்த வேண்டுமா? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.

சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 8 போட்டிகள் ஆடி உள்ளது. இதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

சிஎஸ்கே பாதி ஐபிஎல் தொடரை கடந்து விட்டாலும் இன்னும் உறுதியாக ஒரு பிளெயிங் லெவனில் செட்டாகவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சிஎஸ்கேவில் வீரர்கள் மாற்றப்படுவதும், பேட்டிங் ஆர்டர் மாற்றப்படுவதும் தொடர்கதையாகி உள்ளது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

இன்னும் மிடில் ஆர்டரில் என்ன செய்வது என்ன தெரியாமல் சிஎஸ்கே குழம்பி வருகிறது. மிடில் ஆர்டரில் ஜெகதீசனை இறக்க வேண்டும். சிஎஸ்கேவிற்கு கூடுதலாக பேட்டிங் ஆப்ஷன் கிடைக்கும் என்று பலர் அறிவுரை வழங்கி வருகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் ஜெகதீசன் தேவை இல்லை. கூடுதலாக ஒரு ஸ்பின் பவுலர்தான் தேவை. அதனால் பியூஸ் சாவ்லா அணியில் இருக்க வேண்டும். அவர் வந்தால் அணியில் இரண்டு ஸ்பின் பவுலர்கள் இருப்பார்கள் என்று இன்னொரு பக்கம் வாதம் வைக்கப்பட்டு வருகிறது.

பிராவோ

பிராவோ

மிடில் ஆர்டரில் இந்த பிரச்சனை நிலவி வரும் நிலையில்தான் இன்னொரு விதமான பிரச்சனையும் சிஎஸ்கேவில் தோன்றி உள்ளது. சிஎஸ்கேவில் உண்மையில் பிராவோவை ஆட வைக்க வேண்டுமா என்று விவாதங்கள் எழுந்துள்ளது. பிராவோ சிஎஸ்கேவிற்காக டெத் ஓவர்களில் பவுலிங் செய்கிறார். ஆனால் அதற்காக மட்டுமே அவரை அணியில் வைத்து இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்விகள் எழுந்துள்ளது.

நியாயம்

நியாயம்

பிராவோ தற்போது டெத் ஓவர்கள் போட்டாலும் பெரிதாக பேட்டிங் செய்வது இல்லை. அவர் பேட்டிங் இறங்கிய இரண்டு போட்டியிலும் வந்த வேகத்தில் பெவிலியன் சென்றார். இவர் பேட்டிங் பார்ம் அவுட் ஆகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. இந்த வருடம் சிபிஎல் தொடரில் கூட பிராவோ சரியாக பேட்டிங் செய்யவில்லை. இப்படி இருக்கும் போது டெத் ஓவர் போடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை அணியில் வைத்து இருக்கிறார் தோனி.

கோரிக்கை

கோரிக்கை

ஆனால் பிராவோவை விட இந்த சீசனில் ஷர்துல் தாக்கூர் சிறப்பாக டெத் ஓவர்களில் பவுலிங் போடுகிறார். சிஎஸ்கேவிற்கு பிராவோ இப்போது உண்மையில் அவசியமா என்று கேள்வி எழுந்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் கோட்டாவை பிராவோவிற்கு பயன்படுத்தாமல் இம்ரான் தாஹிரை உள்ளே இறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

இம்ரான் தாஹிர்

இம்ரான் தாஹிர்

பிராவோவை பயன்படுத்துவது தோனியின் பழைய பார்முலா. இந்த பார்முலா எப்போதும் எடுபடாது. போக போக பிராவோ ஓவர் அமீரகத்தில் இருக்கும் பிட்ச்களில் எடுபடாது. போக போக பிராவோ சொதப்ப வாய்ப்பு உள்ளது. அதனால் இப்போது நல்ல ஸ்பின் பவுலர்தான் சிஎஸ்கேவிற்கு தேவை. பிராவோவிற்கு பதிலாக தாஹிரை இறக்கலாம். தாஹிரையும், தாக்கூரையும் வைத்து டெத் ஓவர் வீச சொல்லலாம்.

யாரை நீக்கலாம்

யாரை நீக்கலாம்

தாஹிர் வருகையால் பியூஸ் சாவ்லா அல்லது கரன் சர்மாவை நீக்கிவிடலாம். அவர்களுக்கு பதிலாக ஜெகதீசனை கொண்டு வரலாம். இதனால் பிராவோ விட்டு சென்ற பேட்டிங் ஆப்ஷனும் ஜெகதீசன் மூலம் பூர்த்தியாகும் என்று கூறுகிறார்கள். அதாவது சிஎஸ்கேவின் சாம் கரன், டு பிளசிஸ், வாட்சன், ராயுடு, என் ஜெகதீசன், தோனி, ஜடேஜா, தாக்கூர், தீபக் சாகர், இம்ரான் தாஹிர், கரன் சர்மா இறங்கலாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

சிஎஸ்கே இந்த அணியுடன் இறங்கினால் மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆப்ஷன் கிடைக்கும். அதேபோல் சிஎஸ்கேவில் மிஸ் ஆகும் ஸ்பின் மேஜிக்கை இம்ரான் தாஹிர் பூர்த்தி செய்வார். பிராவோ சிறப்பான வீரர், பினிஷர்தான். ஆனால் இந்த சீசனில் அவர் பார்மில் இல்லை. இதனால் அவரை விளையாடும் அணியில் வைத்து இருப்பது அவ்வளவு நல்ல முடிவு இல்லை.

Story first published: Friday, October 16, 2020, 7:22 [IST]
Other articles published on Oct 16, 2020
English summary
IPL 2020: Dhoni has to consider giving chance to Imran Tahir instead of Bravo.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X