For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பன்றிகளோடு மோதினால்.. நம் மீதுதான் சேறு படும்.. ஹர்பஜன் செய்த "திடீர்" டிவிட்.. யாரை சொல்கிறார்?

துபாய்: சிஎஸ்கே அணி வீரர் ஹர்பஜன் சிங் செய்திருக்கும் டிவிட் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

சிஎஸ்கே அணியின் ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங் இந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை. குடும்ப காரணங்களை குறிப்பிட்டு சீசன் தொடங்கும் முன் தொடரில் இருந்தே வெளியேறினார்.

தொடரில் இருந்து இவர் வெளியேறி இருந்தாலும் கூட தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் குறித்த விமர்சனங்களை வைத்து வருகிறார்.

விமர்சனம்

விமர்சனம்

முக்கியமாக சிஎஸ்கே குறித்தும், கேப்டன் தோனி குறித்தும் ஹர்பஜன் விமர்சனங்களை வைத்து வருகிறார். இவரின் விமர்சனங்களுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அதேபோல் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து இவர் வெளியேற குடும்ப விஷயங்கள் மட்டும்தான் காரணமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இவருக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் ஏதாவது மோதல் இருக்கிறதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால் ஹர்பஜன், ரெய்னா இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்கள். இவர்கள் வெளியேறிய பின் ஹர்பஜனின் ஒப்பந்தத்தை சிஎஸ்கே ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் கூட தகவல்கள் வந்தது.

தகவல்கள் வந்தது

தகவல்கள் வந்தது

இந்த நிலையில்தான் தற்போது ஹர்பஜன் சிங் முக்கியமான டிவிட் ஒன்றை செய்துள்ளார். அதில், பன்றிகளோடு மல்யுத்தம் செய்ய கூடாது என்பது நான் பல வருடங்களுக்கு முன்பு படித்த பாடம். பன்றிகளோடு மோதினால் நமக்குத்தான் சேறு படும். அதோடு பன்றிகளும் அதைதான் விரும்பும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

யாரை

யாரை

யாரை குறிப்பிட்டு ஹர்பஜன் இப்படி டிவிட் செய்துள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் எல்லோரும் ஹர்பஜனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஹர்பஜன் சிஎஸ்கேவைதான் இப்படி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார் என்று சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மிக மோசம்

மிக மோசம்

முன்னதாக தோனியின் வயதை இர்பான் பதான் மறைமுகமாக கிண்டல் செய்திருந்தார். அந்த டிவிட்டை ஷேர் செய்து பதானுக்கு ஆதரவாக ஹர்பஜன் பேசி இருந்தார். தோனியை அப்போதே ஹர்பஜன் மறைமுகமாக கிண்டல் செய்து இருந்தார். அதற்கு பின் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் நடுவருடன் வைட் ஒன்றுக்காக தோனி வாக்குவாதம் செய்ததை ஹர்பஜன் கிண்டல் செய்து இருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

சிரிக்க கூடிய ஸ்மைலிகளை வெளியிட்டு தோனியை கிண்டல் செய்து இருந்தார். ஹர்பஜனின் இந்த தொடர் டிவிட்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் செய்திருக்கும் டிவிட்டும் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

Story first published: Friday, October 16, 2020, 12:40 [IST]
Other articles published on Oct 16, 2020
English summary
IPL 2020: I learned a long ago never to Wrestle with a pig says Harbhajan Singh in his tweet.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X