For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்லோவாக மாறிவிட்டது.. ஐபிஎல்லின் 2ம் பாதியில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு..நங்கூரத்தை இறக்கும் சிஎஸ்கே

துபாய்: ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்த சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. எல்லா அணிகளும் 7 அல்லது அதற்கும் அதிகமான போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளது. இதில் சென்னை 8 போட்டிகளில் 3ல் வென்றுள்ளது.

கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிராக வென்ற சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. சிஎஸ்கேவின் வெற்றி குறித்து பயிற்சியாளர் பிளமிங் பேட்டி அளித்துள்ளார்.

ஜடேஜா

ஜடேஜா

பிளமிங் தனது பேட்டியில், தற்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் பிட்ச்கள் எல்லாம் போக போக வறட்சியாக மாறும். வரும் நாட்களில் பிட்ச் இன்னும் காய்ந்து போகும். அது சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். கடந்த போட்டியில் ஜடேஜா போட்ட பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனது. அவரால் சரியாக பந்தை சுழற்ற முடிந்தது.

ஸ்பின்னர்கள்

ஸ்பின்னர்கள்

இதன் காரணமாக எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் குழம்பிப் போவார்கள் . இதே நிலை தொடர்ந்தால் வரும் நாட்களில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு ஸ்பின் பவுலர்கள் உதவி செய்வார்கள். ஸ்பின்னர்கள் போட்டியை மாற்றும் திறன் கொண்டு இருப்பார்கள். அதற்காகவே காத்து இருந்தோம்.

பவுலிங் அட்டாக்

பவுலிங் அட்டாக்

பிட்ச் ஸ்லோவாக மாறினால் எங்களின் பவுலிங் அட்டாக் இன்னும் வலிமையாக இருக்கும். எங்கள் அணி எப்படிப்பட்ட இலக்கையும் கட்டுப்படுத்தும் அணியாக இருக்க வேண்டும். தேவையான நேரங்களில் அதிரடியாகவும் ஆட வேண்டும். ஸ்பின் மட்டும் வேலை செய்ய தொடங்கிவிட்டால் போதும்.. எங்களிடம் அதற்கான ஸ்பெஷலிஸ்டுகள் உள்ளனர் .

சாதகமாக இருக்கும்

சாதகமாக இருக்கும்

எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த பவுலர் ஒருவர் இருக்கிறார். இந்திய பவுலர்களும் நன்றாகவே பவுலிங் செய்கிறார்கள். அணியின் சமநிலையை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் தற்போது சவாலான விஷயமாக உள்ளது. பிட்ச் இதேபோல் சென்றால்.. ஆட்டம் எங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று பிளமிங் கூறியுள்ளார்.

பார்மிற்கு திரும்பும்

பார்மிற்கு திரும்பும்

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மீண்டும் பார்மிற்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சிஎஸ்கே எப்போதும் ஸ்பின் பவுலிங்கை நம்பித்தான் களமிறங்கும். சென்னை சேப்பாக்கம் மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான மைதானம். அங்கு பிட்ச் ஸ்லோவாக இருக்கும். இதே நினைப்போடுதான் சிஎஸ்கே அமீரகம் சென்றது.

சாதகம்

சாதகம்

ஆனால் தொடக்கத்தில் சிஎஸ்கேவின் திட்டங்களுக்கு பிட்ச் ஒத்துழைக்கவில்லை. ஆனால் தற்போது சிஎஸ்கேவிற்கு சாதகமாக பிட்ச் மாற தொடங்கி உள்ளது. அமீரகத்தில் இருக்கும் பிட்ச்கள் ஸ்லோ பிட்சாக மாறி வருகிறது. இதற்கு ஏற்றபடி ஸ்பின் பவுலர்களை இறக்கினால் போதும். சிஎஸ்கே கரை சேர்க்கும் நங்கூரமாகவே இதுவரை ஸ்பின் பவுலர்கள் இருந்துள்ளனர் .

ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு

ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு

கடந்த முறை சிஎஸ்கேவிற்கு இம்ரான் தாஹிர்தான் கேம் சேஞ்சராக இருந்தார். இந்த முறையும் சிஎஸ்கே வரும் நாட்களில் இம்ரான் தாஹிரை பயன்படுத்தும் என்று அணியின் சிஇஓவே அறிவித்துவிட்டார். இதனால் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் சிஎஸ்கேதான் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள், விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

Story first published: Thursday, October 15, 2020, 17:14 [IST]
Other articles published on Oct 15, 2020
English summary
IPL 2020: Slow and Dry Pitch may support CSK in coming matches of the second half the season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X