வேறு வழியே இல்லை.. அவர் ஆட முடியாது.. 2 பெரிய காயம்.. ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய தமிழக வீரர்!

துபாய்: ஹைதராபாத் அணியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த விஜய் சங்கர் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஹைதராபாத் அணியில் ஆடி வரும் தமிழக வீரர் விஜய் சங்கர்.. அந்த அணிக்கு இந்த முறை சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆல் ரவுண்டரான இவர் பேட்டிங்கை விட நன்றாக பவுலிங் செய்து வருகிறார்.

அதிலும் ஹைதராபாத் அணியில் இருந்து புவனேஷ்வர் குமார்,மிட்சல் மார்ஷ் உள்ளிட்ட வீரர்கள் வெளியேறி உள்ள நிலையில் விஜய் சங்கர் பவுலிங் அதிக முக்கியத்துவம் பெற்றது.

பவுலர்

பவுலர்

விஜய் சங்கர் தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிராக 6வது பவுலராக செயல்பட்டு வருகிறார். பெரிய அளவில் இவரிடம் பவுலிங் டெக்னீக் இல்லை என்றாலும் கூட தேவையான நேரங்களில் விக்கெட்டுகளை எடுக்கிறார். அவசியமான நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை இவர் எடுக்கிறார்.

விக்கெட்

விக்கெட்

அதிலும் கடந்த சில போட்டிகளாக ஹைதராபாத் அணி விளையாடும் போட்டிகளில் முக்கியமான விக்கெட்டுகளை விஜய் சங்கர்தான் எடுத்தார். அதேபோல் பேட்டிங்கிலும் 30-40 ரன்களை எடுத்து அணிக்கு தேவையான ரன்களை கொடுக்கிறார்.இந்த நிலையில்தான் இவர் காலில் ஏற்பட்ட இரண்டு காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

எப்படி

எப்படி

சரியாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். ஹைதராபாத் அணியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த விஜய் சங்கர் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர் இனியும் தொடரில் ஆட கூடாது என்று அணியின் பிசியோ அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஏற்கனவே உலகக் கோப்பை தொடரின் போது இதேபோல் காலில் காயம் ஏற்பட்ட காரணத்தால் விஜய் சங்கர் தொடரில் இருந்து வெளியேறினார். ஆஸ்திரேலிய தொடருக்கு இவர் தேர்வாகாத நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியாகி உள்ளார். இளம் வீரர் இப்படி அடுத்தடுத்து பல போட்டிகளில் காயம் காரணமாக வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: SRH player Vijay Shankar ruled out of IPL due to injury
Story first published: Saturday, October 31, 2020, 12:29 [IST]
Other articles published on Oct 31, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X