"கமான் நட்டி".. கஷ்டமான நேரத்தில் காத்தார்.. நடராஜனை கொண்டாடும் வெளிநாட்டு வீரர்கள்.. பிசிசிஐ குறி!

துபாய்: ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். ஹைதராபாத் அணி நிர்வாகம் இவர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளது.

2020 ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய அணியில் இடம்பெறாத பல வீரர்கள் இந்த முறை கவனம் ஈர்த்து உள்ளனர்.

அதில் முக்கியமான வீரர் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் உலக அளவில் தனது பவுலிங் மூலம் வைரலாகி உள்ளார்.

ஸ்பெஷலிஸ்ட்

ஸ்பெஷலிஸ்ட்

நடராஜனின் சிறப்பம்சம் என்னவென்றால்.. ஒரு ஓவரில் 6 பந்தும் இவரால் யார்க்கர் போட முடியும் என்பதுதான். ஆம் ஒரு ஓவரில் இவர் மிக துல்லியமாக 6 யார்க்கர் பந்துகளை வீச கூடியவர். யார்க்கர் வீசுவது என்பது ஒரு கலை. துல்லியமாக சரியான வேகத்தில் வீசவில்லை என்றால்.. அது புல் டாஸ் பந்தாக மாறிவிடும். இந்த கலையில் நடராஜன் வித்தகராக இருக்கிறார்.

செம

செம

அதிலும் இந்த தொடரில் அதிகமாக யார்கள் வீசிய (63 யார்க்கர்) வீரர் என்ற பெயரை நடராஜன் பெற்றுள்ளார். டெத் ஓவர்களில் பும்ரா, போல்ட் ஆகியோருக்கு இணையாக ஓவர் வீசும் வீரர் என்ற பெருமை இவருக்கு உள்ளது. அதேபோல் இந்திய அணியில் இடம்பெறாமல் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் லிஸ்டில் இவர்தான் இரண்டாம் இடம் வகிக்கிறார்.

பலரை விக்கெட் எடுத்தார்

பலரை விக்கெட் எடுத்தார்

தோனி, கோலி, ஏபிடி வில்லியர்ஸ், ரசல் என்று இவர் எடுத்த விக்கெட் எல்லாம் பெரிய பெரிய கேம் சேஞ்சர்களின் விக்கெட். இவரின் ஹைதராபாத் அணியில் இருந்த மிட்சல் மார்ஷ், புவனேஷ்வர் குமார் என்று முக்கிய பவுலர்கள் காயம் அடைந்த நிலையில் அணி மிகவும் கஷ்டப்பட்டது. அதேபோல் அணியில் இருந்த கலீல் அஹமதும் சரியாக பந்து வீசாத நிலையில் டெத் ஓவர் பொறுப்பு நடராஜன் மீது விழுந்தது.. அதை மிகவும் சிறப்பாக இவர் செய்து முடித்துள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

கஷ்டமான நேரத்தில் ஹைதராபாத் அணியை இவர் காப்பாற்றி இருக்கிறார். அணியில் இருக்கும் வில்லியம்சன் இவரை.. மச்சான் என்று அழைப்பதும், கீப்பர் பிரைஸ்டோ.. இவரை கமான் நட்டி என்று அழைப்பதும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அணியின் கேப்டன் வார்னர் இவரை பெரிய அளவில் மதிக்கிறார். அதேபோல் இவருக்கு அணியில் முழு சுதந்திரமும் வழங்கி உள்ளார்.

அணியின் கேப்டன்

அணியின் கேப்டன்

ப்ரிட்லி உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் பலர் நடராஜனை பார்த்து வியந்து பாராட்டி இருக்கிறார்கள். இவரின் தொடர் ஆட்டத்தை தற்போது பிசிசிஐ கவனித்து வருகிறது. ஏற்கனவே இந்திய அணியில் வலை பயிற்சி பவுலராக இவர் தேர்வாகி உள்ளார். ஷமி, புவி ஆகியோருக்கு மாற்று வீரராக சில வருடங்களில் நடராஜன் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: T Natarajan impressed many with his bowling performance this year
Story first published: Sunday, November 8, 2020, 10:17 [IST]
Other articles published on Nov 8, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X