நேர்மையா சொல்லனும்னா.. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.. பைனல்சுக்கு முன் புலம்பிய ரோஹித்.. என்னாச்சு?

துபாய்: இன்று டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் தோல்வி அடைந்த மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் குழப்பமாக பேசி உள்ளார்.

இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரின் இரண்டு வலிமையான அணிகள் இன்று மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வென்ற டெல்லி இன்றும் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இந்த நிலையில் டாஸ் தோல்வி அடைந்த ரோஹித் சர்மா மிகவும் குழப்பமாக பேசினார். அதில், நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கிறது. அதனால் டாஸ் தோல்வி அடைந்ததை நான் பெரிதாக நினைக்கவில்லை. பிட்ச் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதனால் டாஸ் வெல்வதால் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

நன்றாக பவுலிங்

நன்றாக பவுலிங்

நாங்கள் நன்றாக பவுலிங் செய்ய வேண்டும். தொடக்கம் நன்றாக இருக்க வேண்டும். இன்னொரு இறுதி போட்டியில் ஆடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த போட்டி சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இதற்கு முன் என்ன நடந்தது என்பது முக்கியம் இல்லை.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

இன்று என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம். இன்றைய போட்டியில் இருக்கும் பிரஷர் வித்தியாசமாக இருக்கும். ஆனால் இதேபோன்ற பிரஷர் போட்டிகளை நாங்கள் எதிர்கொண்டு இருக்கிறோம். இறுதி போட்டியில் பிரஷர் எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.

இன்னொரு போட்டி

இன்னொரு போட்டி

இன்று நடக்கும் போட்டியை.. இன்னொரு போட்டியாக பார்க்க வேண்டும். எங்கள் திட்டத்தை களத்தில் சரியாக செயலாற்ற முடியும் என்று நம்புகிறோம். அணியில் எல்லோரும் பிட்டாக இருக்கிறார்கள். ஆனாலும் ராகுல் சாகருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் அணிக்குள் வருகிறார், என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

துபாயில் இறுதி போட்டி

துபாயில் இறுதி போட்டி

இன்று துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது. இதற்கு முன் இங்கு முதலில் ஆடிய அணியும் வென்றுள்ளது, சேசிங் செய்த அணியும் வென்றுள்ளது.அதேபோல் இன்று பிட்ச் இரண்டுக்குமே சாதகமாக இருக்கிறது. இதனால்தான் ரோஹித் சர்மா..டாஸ் தோல்வி அடைந்ததில் பிரச்சனை இல்லை.. எனக்கும் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: To be frank I am confused says MI skipper Rohit Sharma ahead of Delhi finals
Story first published: Tuesday, November 10, 2020, 19:26 [IST]
Other articles published on Nov 10, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X