For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ராவை விட அவர்தான் மேல்.. அவரது திறமையே வேற.. இளம் வீரரை புகழ்ந்து தள்ளும் ஆஷிஷ் நெஹ்ரா

மும்பை: ஜஸ்பிரித் பும்ராவை விட சிறந்த திறமைகொண்ட இளம் வீரர் இந்திய அணிக்கு உள்ளதாக முன்னாள் வீரர் அஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஒரு வீரராக பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திகழ்கிறார். ஐசிசி பவுலர்கள் தரவரிசை பட்டியலிலும் பும்ரா டாப் இடத்தில் உள்ளார்.

முக்கியமாக டெப்த் ஓவர்களின் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ஜஸ்பிரித் பும்ராவை விட முகமது சிராஜ் சிறந்த பவுலர் என அஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணி இத கண்டிப்பா செய்யனும்.. இல்லைனா அவ்ளோதான் போச்சு.. எச்சரிக்கும் ஆகாஷ் சோப்ரா!ராஜஸ்தான் அணி இத கண்டிப்பா செய்யனும்.. இல்லைனா அவ்ளோதான் போச்சு.. எச்சரிக்கும் ஆகாஷ் சோப்ரா!

பும்ராவை விட சிறந்தவர்

பும்ராவை விட சிறந்தவர்

இதுகுறித்து பேசிய அவர், கடந்த 3 - 4 வருடங்களாங்காக பார்த்து வருகிறேன். இந்திய அணியில் பவுலிங் என்றால் ஜஸ்பிரித் பும்ராவை மட்டுமே அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆற்றலை பொறுத்தவரை பும்ராவை விட முகமது சிராஜ் சிறந்தவர்.

இது அனைத்து வடிவ கிரிக்கெட்டிற்கும் பொருந்தும்.

செயல்பாடு

செயல்பாடு

கடந்த 2 வருடங்களாக சிராஜின் பவுலிங் திறமை குறித்து பேசப்பட்டு வருகிறது. அவர் இந்திய ஏ பிரிவு விளையாடிய போது ஒவ்வொரு போட்டியிலும் 5 - 6 விக்கெட்களை எடுத்துள்ளார். எனவே அவர் ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக திகழ்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ஒரு பவுலர் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவார்.

பொருத்தமான வீரர்

பொருத்தமான வீரர்

டி20 போட்டிகளுக்கு மட்டும் சில வீரர்கள் அணியில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால் முகமது சிராஜ் அனைத்து வடிவ கிரிக்கெட்டிற்கும் பொருத்தமானவர். அவரிடம் பவுலிங்கில் அனைத்து விதமான வேறுபாடுகள் தெரிகின்றன. சிராஜினால், சிறப்பான ஸ்லோ பால்கள், அதிகப்படியான வேகம் இல்லை, புதிய பந்தை கையாள முடிகிறது. அவர் தனது உடல் ஃபிட்னஸையும், மனநிலையையும் சரியாக மேம்படுத்தி வந்தால், அவருக்கு வானம் தான் எல்லை என நெஹ்ரா புகழ்ந்துள்ளார்.

சிராஜின் புள்ளிவிவரம்

சிராஜின் புள்ளிவிவரம்

இந்திய அணிக்காக சமீபத்தில் அறிமுகமான முகமது சிராஜ், இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்கள் எடுத்துள்ளார். 3 டி20 போட்டிகளில் ஆடி 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை 39 போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ் 44 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

Story first published: Saturday, April 24, 2021, 20:41 [IST]
Other articles published on Apr 24, 2021
English summary
Ashish Nehra's praise for young India pacer, says he is even ahead of Jasprit Bumrah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X