For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இம்புட்டு பணமா? ஐபிஎல் ஏலத்தை அதிர வைத்த இந்திய வீரர்கள்.. உச்சத்தில் யுவராஜ் சிங்!

மும்பை : ஐபிஎல் தொடர் என்றாலே பணம் கொட்டும். அந்த தொடரை நடத்தும் பிசிசிஐக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களுக்கும் நிறைய வருமானம் கிடைக்கும்.

கடந்த ஐபிஎல் ஏலங்களில் சில இந்திய வீரர்கள் மட்டுமே பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளனர்.

ஆஸி.வில் ரன் அடிக்காம போனதுக்கு காரணம் இதுதான்.. மனம் திறந்த சீனியர் வீரர்!ஆஸி.வில் ரன் அடிக்காம போனதுக்கு காரணம் இதுதான்.. மனம் திறந்த சீனியர் வீரர்!

நட்சத்திர வீரர்களான விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா போன்றோர் தொடர்ந்து அவர்கள் அணிகளால் தக்க வைக்கப்பட்டு வரும் நிலையில், பிற முக்கிய வீரர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்று பெரிய தொகைக்கு வாங்கப்பட்டனர்.

16 கோடி - யுவராஜ் சிங்

16 கோடி - யுவராஜ் சிங்

ஐபிஎல் ஏலத்தில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் யுவராஜ் சிங் தான். 2015 ஏலத்தில் அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16 கோடிக்கு வாங்கி ஐபிஎல் அரங்கை மிரள வைத்தது. ஆனால், அந்த ஆண்டு அவர் 248 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.

அதற்கும் முன் யுவராஜ் சிங்

அதற்கும் முன் யுவராஜ் சிங்

அதற்கு முந்தைய ஆண்டும் யுவராஜ் சிங் தான் ஐபிஎல் ஏலத்தை கலக்கி இருந்தார். 2014இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை 14 கோடிக்கு வாங்கி இருந்தது. அந்த ஆண்டு அவர் 376 ரன்கள் மற்றும் 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

அதே 2014 ஐபிஎல் ஏலத்தில் தினேஷ் கார்த்திக் 12.5 கோடிக்கு வாங்கப்பட்டார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை அத்தனை பெரிய தொகைக்கு வாங்கி பின் அடுத்த ஆண்டு அவரை விடுவித்தது. அவர் 325 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஜெயதேவ் உனட்கட்

ஜெயதேவ் உனட்கட்

உள்ளூர் வீரரான ஜெயதேவ் உனட்கட் 2018 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 11.5 கோடிக்கு அவரை வாங்கி அனைவரையும் திகைக்க வைத்தது. அவரது செயல்பாடுகள் சராசரியாகவே இருந்தாலும் ஐபிஎல் அரங்கில் அவருக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நல்ல கேப்டன் வேண்டும் என தேடி வந்த போது, கவுதம் கம்பீரை 11.04 கோடிக்கு வாங்கியது. 2012 மற்றும் 2014 ஐபிஎல் சீசன்களில் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2018இல் கேஎல் ராகுலை 11 கோடிக்கு ஏலம் எடுத்து மிரட்டியது. அவரும் அதற்கேற்றார்போல ஒவ்வொரு ஆண்டும் 659, 593, 670 ரன்கள் என ரன் மெஷினாக மாறி அணிக்கு பலம் சேர்த்து வருகிறார். தற்போது அந்த அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.

Story first published: Friday, January 29, 2021, 17:52 [IST]
Other articles published on Jan 29, 2021
English summary
IPL 2021 : Here are the most expensive Indian players in IPL auction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X