45 நிமிடம்.. அப்படியே கதிகலங்கிய சிஎஸ்கே.. தோனி தந்த அட்வைஸ்.. வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள்

சென்னை: நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற 5 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

Dhoni தந்த அட்வைஸ்.. CSK-வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள் | Oneindia Tamil

சிஎஸ்கேவிற்கும் கொல்கத்தாவிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்து இந்த போட்டியில் சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசியில் கொல்கத்தா கொடுத்த கம்பேக்கால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அதிரடியாக ஆடி 220 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா 19.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் சிஎஸ்கே 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதல் விஷயம்

முதல் விஷயம்

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 220 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்டி இருந்தாலும் கூட, மும்பை பிட்சில் இது எடுக்க கூடிய விக்கெட்டுகள்தான் காரணம். அதனால்தான் சிஎஸ்கே தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுக்கும் முடிவில் ஆடியது. அதாவது முதல் பவர் பிளவிலேயே 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்ததுதான் சிஎஸ்கேவின் வெற்றிக்கு முதல் காரணமாக இருந்தது.

சாம் கரன்

சாம் கரன்

5 விக்கெட்டுகளை எடுத்த பின்பும் கூட ரசல், சாம் கரன் களத்தில் இருந்தனர். இவர்கள்தான் ஆட்டத்தை சிஎஸ்கேவிடம் இருந்து திருப்பி சென்றனர். முக்கியமாக ரசல் 22 பந்தில் 5 சிக்ஸ் அடித்து 54 ரன்கள் எடுத்ததுதான் திருப்பு முனையாக இருந்தது. இந்த ஓவரில்தான் மொத்தமாக ஆட்டமே மாறியது. ஆனால் அப்போது சாம் கரனின் பந்தை தவறாக கணித்து ரசல் அவுட் ஆனார்.

மாற்றம்

மாற்றம்

பந்து எப்படி செல்கிறது என்று கணிக்க முடியாமல் தவறு செய்து, ரசல் அவுட் ஆனார். அவர் செய்த இந்த சின்ன தவறுதான் சிஎஸ்கேவிற்கு சாதகமாக மாறியது. மூன்றாவதாக, தோனி தனது பவுலர்களை தொடர்ந்து நம்பினார். கும்மின்ஸ் ஒரே ஓவரில் 4 சிக்ஸ் அடித்த போது கூட தோனி மனம் தளரவில்லை. பவுலர்களை திட்டவில்லை.

மூன்றாவது காரணம்

மூன்றாவது காரணம்

சாம் கரன் ஓவரில்தான் இந்த 4 சிக்ஸ் சென்றது. இதை பார்த்து சிஎஸ்கே வீரர்கள் கொஞ்சம் கதி கலங்கி போனார்கள். ஆனாலும் அதன்பின் அவர் மீது நம்பிக்கை வைத்து தோனி 19வது ஓவரை கொடுத்தார். இதில் வெறும் 8 ரன்களை மட்டுமே சாம் கரன் கொடுத்தார். தோனி தனது வீரர்கள் மீது வைத்திருக்கும் இந்த நம்பிக்கையும் வெற்றிக்கான முக்கியமான காரணம் ஆகும்.

நான்காவது காரணம்

நான்காவது காரணம்

நான்கவதாக, பவுலர்களுக்கு தொடர்ந்து தோனி அட்வைஸ் செய்து கொண்டே இருந்தார். தொடர்ந்து ஆப் சைடில் போடுங்கள் என்று மட்டும் அறிவுரை வழங்கிக்கொண்டே இருந்தார். ஆப் சைடிலேயே வீசுங்கள், வைட் போனால் பிரச்சனையில்லை என்று கூறினார். இதனால்தான் நேற்று 19, 20 ஓவர்களில் கொஞ்சம் ரன் கட்டுப்படுத்தப்பட்டது.

பிட்ச்

பிட்ச்

நேற்று பிட்ச் மிக மோசமாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இதை ஈடுகட்டும் வகையில் நேற்று சிஎஸ்கேவின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. கடைசி 45 நிமிடம் சிஎஸ்கே வீரர்கள் மிக சிறப்பாக பீல்டிங் செய்தனர். கடைசி கட்டத்தில் டென்சன் இருந்த போதும் துல்லியமாக ரன் அவுட் செய்தனர். இதுதான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு நேற்று காரணமாக இருந்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: How CSK won the match against Kolkata yesterday in Wankhede stadium.
Story first published: Thursday, April 22, 2021, 9:18 [IST]
Other articles published on Apr 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X