For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக்கிற்கு இருக்கும் பிரச்னை மும்பை பயிற்சியாளர் கொடுத்த பகீர் தகவல் பிசிசிஐ-க்கு ஏற்பட்ட தலைவலி!

அமீரகம்: ஹர்திக் பாண்ட்யாவின் நிலை குறித்து மும்பை அணி பயிற்சியாளரின் அறிவிப்பு பிசிசிஐ-க்கு தலைவலியை உண்டாக்கியுள்ளது.

Recommended Video

Mumbai Indians declares Hardik Pandya won’t bowl this year | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் புள்ளிப்பட்டியலின் 4வது இடத்திற்காக கடும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் அனைவராலும், கூர்ந்து கவனிக்கப்பட்டு வரும் அணி மும்பை இந்தியன்ஸ் தான் ஆகும். அந்த அணி சரிவில் இருந்து மீண்டு வருகிறது.

'பொக்குனு வச்ச அடி’ அப்பதான் எனக்குள்ள நடந்த மாற்றம்.. ஃபார்முக்கு வந்தது பற்றி ஹர்திக் நெகிழ்ச்சி! 'பொக்குனு வச்ச அடி’ அப்பதான் எனக்குள்ள நடந்த மாற்றம்.. ஃபார்முக்கு வந்தது பற்றி ஹர்திக் நெகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடரின் முதல் பாதி தொடரில் சிறிய வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. ஆனால் 2வது பகுதியில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்து 4வது போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர் ஹர்திக் பாண்ட்யா தான். இவரின் அசத்தலான பேட்டிங் தான் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை தேடிக் கொடுத்தது. ஆனால் இவரின் பந்துவீச்சு தான் ரசிகர்களுக்கு கவலையளிக்கிறது.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த இரண்டு வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் பந்து வீசவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால், பாண்ட்யா கடைசியாக பந்துவீசி 873 நாட்கள் ஆகின்றன. இந்தாண்டு முழுவதும் அவர் பந்துவீச மாட்டார் எனத் தெரிகிறது. மும்பை அணி ஹர்திக் போன்ற சிறப்பான சீனியர் வீரர் இருக்கும் போதும் வெறும் 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது.

பயிற்சியாளர் அறிவிப்பு

பயிற்சியாளர் அறிவிப்பு

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா குறித்து பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதி சரிவர இல்லை. அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் பந்துவீச மாட்டார். அவருக்கு பந்துவீச அழுத்தம் கொடுத்தால், அவரால் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தலைவலி

தலைவலி

இது பிசிசிஐக்கு தான் தற்போது பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா மீது நம்பிக்கை வைத்து பிசிசிஐ சேர்த்துள்ளது. அவர் 7வது வீரராக அணிக்குள் விளையாடவுள்ளார். ஆனால் 7வதாக களமிறங்கும் வீரர் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட்டால், அது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாகும். எனவே அவரை உட்காரவைக்க வேண்டிய சூழல் தான் ஏற்படும்.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர். இது ஒரு துரதிஷ்டவசமானது. டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் தான் இந்தியாவின் கீ ப்ளேயர். முக்கியமான போட்டிகளில் அவரை பந்துவீச அழைக்கவிருந்தோம். ஆனால் உடற்தகுதி பிரச்னைகள் எழுந்துள்ளது. ஆனால் வலைப்பயிற்சிகள் மூலம் அவர் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என நம்புகிறேன்.

Story first published: Saturday, October 2, 2021, 12:12 [IST]
Other articles published on Oct 2, 2021
English summary
Mumbai Indians declares Hardik Pandya won’t bowl on this year, worried BCCI says
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X