For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எனது 120% பங்களிப்பை கொடுத்துவிட்டேன்.. இனிமேல் முடியாது”.. தோல்வி துவண்ட விராட் கோலி - முழு பேட்டி

அமீரகம்: ஆர்சிபி அணியின் கேப்டனாக தனது கடைசி போட்டியில் வழிநடத்தியது குறித்து விராட் கோலி மனம் உருகியுள்ளார்.

14வது ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி ஆர்சிபி மீண்டும் வெளியேறியது.

மிகப்பெரும் பெருமை.. 3 ஜாம்பவான்களை மொக்கையாக்கிய ஒரே ஒரு வீரர்.. ஆர்சிபி சுருண்டது எப்படி? மிகப்பெரும் பெருமை.. 3 ஜாம்பவான்களை மொக்கையாக்கிய ஒரே ஒரு வீரர்.. ஆர்சிபி சுருண்டது எப்படி?

டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அணி 20 ஓவர்களில் 138 ரன்களை மட்டுமே எடுத்தது. தேவ்தத் பட்டிக்கல் (21), கோலி (39) ரன்களுக்கு வெளியேறினர். இதன் பின்னர் வந்த ஸ்ரீகர் பரத் (9), மேக்ஸ்வெல் (15), டிவில்லியர்ஸ் (11) ஆகியோர் சுனில் நரேனின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.

குறைந்த இலக்கு

குறைந்த இலக்கு

139 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது. தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 29 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களும் அடிக்க முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்ந்தது. இதன் பின்னர் வந்த ராகுல் திரிபாதி 6 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதன் பிறகு வந்த சுனில் நரேன் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக கேகேஅர் பக்கம் திருப்பினார். இதனால் பின்னர் வந்த ராணா (23), தினேஷ் கார்த்தி (10) என சேர்க்க அந்த அணி 19.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோற்றது எப்படி

தோற்றது எப்படி

ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்ட கடைசி போட்டி இதுவாகும். ஏனென்றால் இந்த தொடருடன் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து ஆட்டம் முடிந்த பிறகு பேசிய அவர், இந்த ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக ஸ்பின்னர்கள் ஆக்கிரமாத்தார்கள். மிடில் ஓவர்களில் எங்களின் விக்கெட்களை தொடர்ச்சியாக எடுத்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனை மோசமான பேட்டிங் என்று கூறாமல் சிறப்பான பவுலிங் என கூறுவது தான் சரியாக இருக்கும். இதே போல ஆர்சிபியின் பவுலிங்கும் சிறப்பாக இருந்தது. நாங்கள் முடிந்தவரை போராடினோம். ஆனால் மிடிலில் ஒரு ஓவரில் அதிக ரன் வந்துவிட்டது. இதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கேப்டன்சி

கேப்டன்சி

இந்தாண்டு ஆர்சிபி கேப்டனாக நான் ஒரு விஷயத்தை முன்னெடுத்தேன். நிறைய இளம் வீரர்கள், தங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தேன். நான் எனது முழு முயற்சியையும் கொடுத்துவிட்டேன். 120 % சதவீதம் என்னால் முடிந்ததை செய்துவிட்டேன்.

கேப்டனாக மனம் உருகிய கோலி

கேப்டனாக மனம் உருகிய கோலி

அடுத்த 3 ஆண்டுகளை எதிர்நோக்கியுள்ளேன். நான் நிச்சயம் ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன். ஐபிஎல் தொடரில் எனது கடைசி போட்டி வரை ஆர்சிபி அணிக்காக உழைப்பேன் எனத்தெரிவித்தார்.

Story first published: Tuesday, October 12, 2021, 11:03 [IST]
Other articles published on Oct 12, 2021
English summary
virat Kohli gets emotional after RCB Lost the match against KKR under by his last captaincy in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X