இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி ஆத்திரமா.. அவசர செயலால் விராட் கோலிக்கு வந்த ஆப்பு.. வைரலாகும் வீடியோ

சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி கோபத்தில் செய்த ஒரு காரியத்திற்கு தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.

நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியின்போது பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி தான் தவறான ஷாட்டை தேர்வு செய்துவிட்டேன் என்ற கோபத்தில் செய்த செயலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இனி வாய்ப்பில்ல ராஜா..ஐதராபாத் வீரருக்கு அச்சுறுத்தும் அஜய் ஜடேஜா.. காரணமாக அமைந்த ஒற்றை ஷாட்!

சிறப்பான ஜோடி

சிறப்பான ஜோடி

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் 11 ரன்களில் வெளியேற அடுத்த வந்த ஷபாஷ் அஹமத்தும் 7வது ஓவரில் 14 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - விராட் கோலி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டு சென்றனர்.

 தவறான ஷாட்

தவறான ஷாட்

சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி அரை சதம் கடப்பார் என ஆவலுடன் பார்க்கப்பட்டது. ஆனால் ஜேசன் ஹோல்டர் வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று 33 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹோல்டர் ஸ்லோவர் பாலாக போட்டதை கணிக்காத கோலி சிக்ஸர் அடிக்க முயன்று அவுட்டானார்.

கோலி கடும் கோபம்

இதனால் கோபமடைந்த விராட் கோலி பெவிலியனுக்கு திரும்பும்போது அங்கிருந்த நாற்காலியையும், விளம்பரப் பலகையையும் பேட்டால் அடித்து தள்ளிவிட்டார். இது அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கேமராவில் தெளிவாக பதிவானது.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

ஐபிஎல்-ல் விதிமுறையின்படி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பொருட்கள், ஆடைகள் மற்றும் மைதானத்தில் உள்ள பொருட்கள் ஆகியவற்றிற்கு சேதம் விளைவிப்பது விதி மீறலாகும். இதற்கு வீரரின் போட்டி கட்டணத்தில் இருந்து 15% அபராதமும் விதிக்கப்படும். அந்த வகையில் விராட் கோலிக்கும் 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat Kohli Got Fined for breaching the code of conduct of IPL
Story first published: Thursday, April 15, 2021, 17:23 [IST]
Other articles published on Apr 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X