For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு வாய்ப்பு இருக்கா?.. முதல் போட்டியில் பெரும் மாற்றங்களுடன் சிஎஸ்கே.. ப்ளேயிங் 11 கணிப்பு இதோ

மும்பை: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிக்கான சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் 11 தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Dhoni Captaincy விலகல் குறித்து Faf Du Plessis உருக்கமான பதிவு

15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் களமிறங்குகிறது. இதற்காக ப்ளேயிங் 11 - ஐயும் இறுதி செய்துள்ளது.

வெங்கடேஷ் ஐயருக்கு சர்பரைஸ் தந்த செத் லாரன்ஸ்.. சிஎஸ்கே போட்டிக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. காரணம் என்ன?? வெங்கடேஷ் ஐயருக்கு சர்பரைஸ் தந்த செத் லாரன்ஸ்.. சிஎஸ்கே போட்டிக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. காரணம் என்ன??

ஓப்பனிங் ஜோடி எது

ஓப்பனிங் ஜோடி எது

ஓப்பனிங்கை பொறுத்தவரையில் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் முழு உடற்தகுதி பெற்றுவிட்டார். கடந்த சீசனில் டூப்ளசிஸுடன் அனுபவம் மற்றும் ருதுராஜின் அதிரடி கைக்கொடுத்தது. அந்த வகையில் தான் இந்தாண்டு நியூசிலாந்து அதிரடி ஓப்பனர் டெவோன் கான்வே-ஐ ஓப்பனிங்கிற்கு களமிறக்கவுள்ளனர்.

மிடில் ஆர்டர் வீரர்கள்

மிடில் ஆர்டர் வீரர்கள்

மொயீன் அலி குவாரண்டைனில் இருப்பதால் முதல் போட்டியில் விளையாட மாட்டார். எனவே அவரின் இடத்திற்கு சீனியர் வீரர் ராபின் உத்தப்பா களமிறங்கவுள்ளார். இந்த போட்டியில் அவர் தனது திறமையை நிரூபித்தால் தான் அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும். அவரை தொடர்ந்து அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மிடில் ஆர்டரை தாங்கிப்பிடிக்க உள்ளனர்.

தோனியின் வாய்ப்பு?

தோனியின் வாய்ப்பு?

ப்ளேயிங் 11ல் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பம் இருந்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக அவரின் ஃபார்ம் மோசமாக உள்ளது. எனினும் ஜடேஜாவுக்கு உறுதுணையாக இருக்கவும், விக்கெட் கீப்பிங்கிற்கும் தோனியின் தேவை இன்னும் உள்ளது. இதனால் முதல் சில போட்டிகளில் அவர் விளையாடலாம்.

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

லோயர் ஆர்டரில் அணியின் ஸ்கோரை உயர்த்த சாம் கரண் இருந்து வந்தார். தற்போது அவரின் பணியை செய்ய ஷிவம் தூபே இருக்கிறார். இவர் பேட்டிங் மட்டுமல்லாது, வேகப்பந்துவீச்சிலும் அவ்வப்போது உதவலாம். இவருக்கு அடுத்தபடியாக டுவைன் பிராவோ அணியில் இடம்பெறுவார். தீபக் சஹார் இல்லாததால் பவர் ப்ளே ஓவர்களில் பிராவோ தான் சிஎஸ்கேவை காப்பாற்ற வேண்டும்.

டெயில் எண்டர்கள் யார்

டெயில் எண்டர்கள் யார்

டெயில் எண்டர்கள் வரிசையில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இடம் பெறலாம். U19 உலகக்கோப்பை தொடரில் பவர் ஹிட்டிங் மற்றும் பவுலிங் என அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதே போல ஹாசல்வுட்டின் இடத்தை நிரப்ப இந்த வருடம் ஆடம் மில்னே அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மொயீன் அலி இல்லாததால் மிஸ்ட்ரி ஸ்பின்னராக இலங்கை வீரர் மஹீஷ் தீக்‌ஷணா சேர்க்கப்படலாம்.

ப்ளேயிங் 11 என்ன

ப்ளேயிங் 11 என்ன

டெவோன் கான்வே, ருதுராஜ் கெயிக்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி, ஷிவம் தூபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிராவோ மஹிஷ் தீக்‌ஷனா, ஆடம் மில்னே

Story first published: Saturday, March 26, 2022, 17:28 [IST]
Other articles published on Mar 26, 2022
English summary
IPL 2022 : Is Dhoni get a chance in CSk Playing 11 against KKR of Season opener
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X