For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்கிய வீரருக்கு இடமில்லை.. முதல் போட்டிக்கான சிஎஸ்கே ப்ளேயிங் 11ல் ட்விஸ்ட்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

மும்பை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் தொடங்கியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறு முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் போட்டிக்கான ப்ளேயிங் 11-ஐ அட்டகாசமாக தயார் செய்துள்ளது சென்னை அணி.

IPL 2022: சிஎஸ்கே vs கொல்கத்தா.. டாஸ் வென்றால் பேட்டிங் எடுக்கலாமா? வான்கடே பிட்ச் ரிப்போர்ட் இதோ! IPL 2022: சிஎஸ்கே vs கொல்கத்தா.. டாஸ் வென்றால் பேட்டிங் எடுக்கலாமா? வான்கடே பிட்ச் ரிப்போர்ட் இதோ!

ஓப்பனிங் ஜோடி எது

ஓப்பனிங் ஜோடி எது

ஓப்பனிங்கை பொறுத்தவரையில் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்குகின்றனர். இரண்டு வீரர்களுமே அதிரடி காட்டுபவர்கள் என்பதால், இந்த முறை பவர் ப்ளே ஓவர்களிலேயே சராசரியாக 50 ரன்கள் எதிர்பார்க்கலாம்.

 மிடில் ஆர்டர் வீரர்கள்

மிடில் ஆர்டர் வீரர்கள்

மொயீன் அலி குவாரண்டைனில் இருப்பதால் முதல் போட்டியில் விளையாடவில்லை. எனவே அவரின் இடத்திற்கு சீனியர் வீரர் ராபின் உத்தப்பா களமிறங்கவுள்ளார். அவரை தொடர்ந்து அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மிடில் ஆர்டரை தாங்கிப்பிடிக்கவுள்ளனர்.

தோனிக்கு இடம்

தோனிக்கு இடம்

ப்ளேயிங் 11ல் தோனிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஜடேஜாவுக்கு பின்னர் களமிறங்குகிறார். லோயர் ஆர்டரில் அணியின் ஸ்கோரை உயர்த்த சாம் கரண் இருந்து வந்தார். தற்போது அவரின் பணியை செய்ய ஷிவம் தூபே இருக்கிறார். இவர் பேட்டிங் மட்டுமல்லாது, வேகப்பந்துவீச்சிலும் அவ்வபோது உதவலாம்.

பவுலிங் படை என்ன

பவுலிங் படை என்ன

ஆல்ரவுண்டர்களில் சீனியர் வீரர் டுவைன் பிராவோ அணியில் இடம்பெற்றுள்ளார்.

தீபக் சஹார் இல்லாததால் பவர் ப்ளே ஓவர்களில் பிராவோ தான் சிஎஸ்கேவை காப்பாற்ற வேண்டும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட U 19 வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு மாற்றாக துஷார் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர். ஆடம் மில்னே அவருக்கு உறுதுணையாக உள்ளார். மொயீன் அலி இல்லாதததால் 2வது ஸ்பின்னராக மிட்செல் சாண்ட்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Recommended Video

IPL 2022 : Deepak Chahar Starts Training For Chennai Super Kings | Oneindia Tamil
ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

டெவோன் கான்வே, ருதுராஜ் கெயிக்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி, ஷிவம் தூபே, டுவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், ஆடம் மில்னே, துஷார் தேஷ் பாண்டே

Story first published: Saturday, March 26, 2022, 19:33 [IST]
Other articles published on Mar 26, 2022
English summary
KKR won the toss against CSK in IPL 2022 Opener, Star player not getting chance
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X