For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பொய் கூறியதா சிஎஸ்கே நிர்வாகம்.. ருதுராஜின் மீது எழுந்த குற்றச்சாட்டு.. முதல் போட்டியிலேயே அம்பலம்!

மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியின் தொடக்கத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிவரும் போட்டி வான்கடேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஐபிஎல்- ராயுடுவுக்கு செம லக்.. ஸ்டம்பில் பந்து பட்டும் அவுட்டாகவில்லை.. தமிழக வீரர் பாவம்ஐபிஎல்- ராயுடுவுக்கு செம லக்.. ஸ்டம்பில் பந்து பட்டும் அவுட்டாகவில்லை.. தமிழக வீரர் பாவம்

ஓப்பனிங்கே ஆப்பு

ஓப்பனிங்கே ஆப்பு

இதனையடுத்து சென்னை அணியின் ஓப்பனிங் ஜோடியாக இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கினர். இரு வீரர்களுமே அதிரடி காட்டுபவர்கள் என்பதால், முதல் ஓவரில் இருந்தே பவுண்டரிகள் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைத்திற்கும் மொத்தமாக ஏமாற்றம் தந்தார் ருதுராஜ் கெயிக்வாட்.

உமேஷின் மந்திரம்

உமேஷின் மந்திரம்

ஆட்டத்தின் முதல் பந்தையே நோ பாலாக போட்ட உமேஷ் யாதவ், ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு சாதாரணமாக விளையாடி விடலாம் என்ற நம்பிக்கையை விதைத்தார். அதன்பின்னர் 2வது பந்தையும் வைட் திசையில் போட்டு தனது திட்டத்தை வெளிப்படையாகவே காண்பித்தார். எனினும் இதனை ருதுராஜ் உணரவில்லை.

வசமாக சிக்கிய ருதுராஜ்

வசமாக சிக்கிய ருதுராஜ்

3வது பந்தையும் வைடாக தான் போடுவார் என கணித்து ஒரு அடி முன் சென்று விளையாடினார். ஆனால் இங்கு தான் ட்விஸ்டே. முன்பு போட்டப்பட்ட பந்துகளை விட உமேஷ் யாதவ் சற்று பவுன்சரை அதிகமாக வைத்ததால் ருதுராஜின் பேட்டில் எட்ஜாகி ஸ்லிப் திசையில் கேட்ச் சென்றது. கொல்கத்தா விரித்த வலையில் வசமாக சிக்கினார்.

ஃபுட் வொர்க்கே இல்லை

ஃபுட் வொர்க்கே இல்லை

ருதுராஜ் கெயிக்வாட் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என சிஎஸ்கே நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால் அவர் சந்தித்த அனைத்து பந்திகளிலுமே ஃபுட் வொர்க் சரியாக இல்லை. பந்தை எதிர்கொள்ள திணறினார். இன்னும் முழுமையாக அவர் தயாராகவில்லை என வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இதனால் சிஎஸ்கே நிர்வாகம் உண்மையை மறைக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, March 26, 2022, 21:02 [IST]
Other articles published on Mar 26, 2022
English summary
IPL 2022: Ruturaj gaikwad fall in the Umesh yadhav's trap, dissappointed the fans with duck out on CSK vs KKR match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X