“அதுக்கூடவா தெரியாம போயிடுச்சு” சஞ்சு சாம்சனை விளாசிய சச்சின்.. ராஜஸ்தான் தோல்விக்கான காரணம்!

மும்பை: ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் முக்கிய வீரர் செய்த ஒரே ஒரு தவறு தான் என சச்சின் டெண்டுல்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended Video

Sanju Samson செய்தது மிகப்பெரிய தவறு Sachin Tendulkar காட்டம் | #Cricket

ஐபிஎல் 15வது சீசனில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. டாப் ஆர்டரின் சொதப்பல், பந்துவீச்சில் நிலையான திட்டம் இல்லை என பல குற்றச்சாட்டுக்களும் அடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சஞ்சு சாம்சனின் கேப்டன்சி சரியில்லை என்று தான் கூறப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர் விளாசல்

சச்சின் டெண்டுல்கர் விளாசல்

இந்நிலையில் இதையே தான் சச்சினும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய, ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது தான் ஆச்சரியமே. கடந்த போட்டியில் முதலில் பவுலிங் செய்யும் போது, பவுலர்களுக்கு நல்ல ஸ்விங் கிடைத்தது. ஆனால் பெரிய போட்டி என்ற காரணத்தால் பேட்டிங்கை தேர்வு செய்து சொதப்பிவிட்டனர்.

 அட்வாண்டேஜ் இருந்தது

அட்வாண்டேஜ் இருந்தது

அகமதாபாத் களத்தில் குஜராத் அணி ஆடியதே இல்லை. ராஜஸ்தான் அணி 2வது குவாலிஃபையரில் ஆடியிருந்தது. இந்த களத்தை பற்றி தெரிந்திருந்தும் சஞ்சு சாம்சன் பேட்டிங் எடுத்தது தவறு. ஒருவேளை ஜாஸ் பட்லர் கடந்த போட்டியில் அதிரடி காட்டியதை போன்று இறுதிப்போட்டியிலும் காட்டுவார் என பேட்டிங் எடுத்திருக்கலாம் என நினைக்கிறேன. ஆனால் பட்லருக்கு சஞ்சு சாம்சனை தவிர்த்து வேறு யாரிடமும் இருந்து பெரியளவில் ஆதரவு கிடைக்கவில்லை.

தனி ஆளாக போராட்டம்

தனி ஆளாக போராட்டம்

50% அளவிற்கு ஜாஸ் பட்லர் அடித்திருந்தால் மீதமுள்ள 50 % ரன்களை மற்ற வீரர்கள் தான் அடித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வீரர் கூட கைக்கொடுக்கவில்லை. தனி நபராக போராடி விக்கெட்டை இழந்தார். இதுதான் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணம் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022: Sachin tendulkar points out the mistakes of Rajasthan royals in GT match
Story first published: Tuesday, May 31, 2022, 13:15 [IST]
Other articles published on May 31, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X