For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு பாட்டுதான்.. இருந்த மரியாதையும் க்ளோஸ்.. ஆர்சிபியை வைத்து செய்த கர்நாடக மக்கள்.. சர்ச்சை!

பெங்களூர்: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று காலை வெளியிட்ட ஆர்சிபி பாடல் பெரிய சர்ச்சையான நிலையில், புதிய பாடல் ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

ஐபிஎல் தொடரின் இரண்டு பெரிய ஜாம்பவான் அணிகள் நாளை நேருக்கு நேர் மோத இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நாளை ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.

இரண்டு அணியின் ரசிகர்களும் இதனால் இணையத்தில் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படி இரண்டு பெரிய அணிகள் நாளை மோத இருக்கும் நிலையில் குறுக்க வந்து, சம்பந்தமே இல்லாமல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது பெங்களூர் அணி.

ரெய்னா இடம் எனக்கு தான்.. முட்டி மோதும் 3 சிஎஸ்கே வீரர்கள்.. ஒருவருக்கு மட்டும் கல்தா.. தோனி அதிரடி!ரெய்னா இடம் எனக்கு தான்.. முட்டி மோதும் 3 சிஎஸ்கே வீரர்கள்.. ஒருவருக்கு மட்டும் கல்தா.. தோனி அதிரடி!

நடந்தது என்ன

நடந்தது என்ன

ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் சில அணிகளுக்கு என்று பிரத்யோக பாடல்கள் உள்ளது. அந்தந்த அணிகளுக்கு என்று ''ஆன்தம்'' என்று அழைக்கப்படும் சிறப்பு கீதங்கள் உள்ளது. சென்னை அணியின் '' சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க'' தொடங்கி கொல்கத்தா அணியின் பெங்காலி பாடல் வரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பாடல்கள் உள்ளது.

சென்னை பாடல்

சென்னை பாடல்

அதிலும் சென்னை அணியின் ''விசில் போடுங்க'' பாடல்தான், மற்ற பாடல்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது. இந்த பாடல் உலக அளவில் ஹிட் அடித்த கிரிக்கெட் டீம் பாடல் ஆகும். இந்த நிலையில் ''சிங்கத்தை பார்த்து சிங்கிள்ஸ் தாடி வளர்த்த கதையாக'', பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று தனக்கு என்று ஆன்தம் ஒன்றை வெளியிட்டது.. ஆனால் ஆர்சிபி பாடல் ரொம்ப டல்லாக இருந்த காரணத்தால் கன்னடிக்காஸ் பெங்களூர் அணியை துவைத்து எடுத்து சில்க் போர்ட் சிக்னலில் காயவிட்டு இருக்கிறார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இன்று காலை வெளியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பாடலில் முழுக்க முழுக்க இந்தி மற்றும் ஆங்கில வரிகள்தான் இருந்தது. பிசில்பில்லா பாத்துக்கு கொடுக்கும் காரபூத்தி அளவிற்கு கூட இந்த பாடலில் கன்னடம் இல்லை. இந்தியை தமிழர்கள் போலவே கர்நாடக மக்களும் கடுமையாக எதிர்ப்பார்கள். இப்படி இருக்கையில் இந்த பாடலை கேட்டதும், ஆர்சிபி அணியை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள். ஒரு கப்புதான் வாங்க முடியல.. பாட்டாவது ஒழுங்கா போட தெரியாதா என்று கடுமையாக கிண்டல் செய்துள்ளனர்.

பெங்களூர் டீம்

பெங்களூர் டீம்

இது கர்நாடக மாநிலத்தின் டீம், இதில் கூட தாய் மொழி இல்லையென்றால் எப்படி, என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். இதையடுத்து பின்வாங்கிய பெங்களூர் அணி நிர்வாகம் சில மணி நேரங்களில், வேறு ஒரு பாடலை வெளியிட்டது. நிறைய கன்னட வார்த்தைகள் உடன் இன்னொரு பாடலை வெளியிட்டது.இதில் இருந்த கன்னட ராப் வரிகள் மிகவும் வைரல் ஆகி உள்ளது.

யார் பாடினார்

யார் பாடினார்

அதிலும் கர்நாடக கிரிக்கெட் அணியின் இளம் வீரர் தேவதூத் படிக்கல் இந்த பாடலில் இருக்கும் ராப் வரிகளை தானே எழுதி பாடி இருக்கிறார். ஆர்பிசி, ஆர்பிசி என்று ''அபிராமி அபிராமி'' கணக்காக இந்த பாடல் வெளியாகி உள்ளது. முதல் பாடலை விட இரண்டாவது பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்து வைரலாகி உள்ளது. மக்களும் இந்த கன்னட வரி உள்ள பாடலை ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

Story first published: Friday, September 18, 2020, 22:13 [IST]
Other articles published on Sep 18, 2020
English summary
IPL: Bangalore Royal Challengers Anthem sparks fire for not having Kannada lyrics.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X