எதற்கெடுத்தாலும் ஐபிஎல் மீது பழிபோடுகிறீர்கள்.. நிறுத்திக் கொள்ளுங்கள்.. அழுத்தி சொன்ன கம்பீர்!

டெல்லி: இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல் என்றும், அதனை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கு வீரர்களின் அணுகுமுறையும், ஐபிஎல் தொடருமே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த சிறந்த மாற்றம் ஐபிஎல் தொடர் தான் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே முக்கியத்துவம் பெற்று வருகிறது.

முதுகில் குத்திய கம்பீர்.. .. அவமானப்படுத்திய லக்னோ அணி.. மணிஷ் பாண்டே புகார்.. என்ன நடந்தது? முதுகில் குத்திய கம்பீர்.. .. அவமானப்படுத்திய லக்னோ அணி.. மணிஷ் பாண்டே புகார்.. என்ன நடந்தது?

 கவுதம் கம்பீர் கருத்து

கவுதம் கம்பீர் கருத்து

டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் பங்கேற்று கவுதம் கம்பீர் கூறுகையில், இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள்.

ஐபிஎல் மீது விமர்சனம்

ஐபிஎல் மீது விமர்சனம்

ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல் தொடர் என்று விரலை நீட்டுவது சரியாக இருக்காது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது. இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன்.

கிரிக்கெட் உணர்வு

கிரிக்கெட் உணர்வு

ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட்டில் உணர்வும் கலந்திருக்கிறது. இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும். லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிக் பாஷ் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில், எத்தனை இந்தியர்கள் பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள்.

இந்திய பயிற்சியாளர்கள்

இந்திய பயிற்சியாளர்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி. ஆனால் நமது பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கு வந்து பல வெளிநாட்டு கிரிக்கெட்டர்கள் பணி செய்கிறார்கள். நமது நாட்டு வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்தியாவில் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. ஒடிசா ஹாக்கி விளையாட்டை விளையாடுவது போல் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விளையாட்டில் ஜொலிக்க வேண்டும்.

 பிசிசிஐ வருமானம்

பிசிசிஐ வருமானம்

அப்படி இருந்தால், ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை எங்கோ இருக்கும். பிசிசிஐ தனது 50% வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். பிசிசிஐயின் 50% வருமானமே, கிரிக்கெட்டிற்கு போதுமானவை. அதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மீதமுள்ள 50% வருமானத்தை ஒதுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former cricketer Gautam Gambhir has said that IPL is the biggest boon for Indian cricket and we should stop criticizing it.
Story first published: Saturday, November 26, 2022, 21:52 [IST]
Other articles published on Nov 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X