ஐபிஎல் ஏலத்திற்கு பயந்து பாத்ரூமில் ஒளிந்து கொண்டேன்.. கண்ணீர் விட்ட இளம் வீரர்!

Posted By:

சென்னை: நேற்றும் நேற்று முதல் நாளும் பெங்களூரில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. பல வருடங்களுக்கு பின் மீண்டும் ஏலம் பெரிய அளவில் நடந்தது.

இதில் பெரிய வீரர்கள் பலர் ஏலம் எடுக்கப்படாமல் போனார்கள். அதே சமயத்தில் புதிய வீரர்கள் சிலர் அதிக விலைக்கு சென்றார்கள்.

அப்படித்தான் ஐபிஎல் ஏலத்தில் கம்லேஷ் நாகர்கோட்டி என்ற வீரர் கொல்கத்தா அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் அந்த அணியால் 3.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

யார்

கம்லேஷ் நாகர்கோட்டி தற்போது நியூசிலாந்தில் இருக்கிறார். இவர் தற்போது இந்திய அண்டர் 19 அணியில் ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடிக் கொண்டு இருக்கிறார். வரிசையாக ஒரு போட்டியை கூட இந்தியா தோற்காமல் விளையாட இவரும் ஒரு காரணம். அசால்ட்டாக 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய திறமையான வீரர் இவர்.

என்ன

என்ன

இவர் நேற்று ஏலம் நடந்த போது அதை பார்க்க மனம் இல்லாமல் இருந்துள்ளார். எல்லோரும் ஏலம் பார்த்தும் இவர் பார்க்கவில்லை. அவர் ஏலம் எடுக்கப்பட்ட போது பாத்ரூமிற்குள் ஒளிந்து இருக்கிறார். நண்பர்கள் செய்த போனையும் எடுக்கவில்லை.

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

அவருக்கு கொல்கத்தா அணியில் சேர்ந்த விஷயம் தெரிந்தவுடன் வீட்டில் இருந்து போன் வந்துள்ளது. அவர் அம்மா பேசி இருக்கிறார். நிறைய பேர் பேட்டி எடுக்க வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பேஸ்புக்கில் அவருக்கும் வரும் வாழ்த்தை பார்த்து மலைத்து போய் இருக்கிறார்.

1 தடவை

1 தடவை

இதற்கு முன் ஒரே ஒரு தடவை தான் ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். பல முறை டிக்கெட் கிடைத்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று பேசி இருக்கிறார் இந்த இளம் புயல்.

Story first published: Monday, January 29, 2018, 15:25 [IST]
Other articles published on Jan 29, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற