For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டநாயகன் விருது வென்றவரை எப்படியா நீக்குவீங்க? ஒன்னுமே எனக்கு புரியல.. கபில்தேவ் காட்டம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முறை குறித்து தமக்கு சுத்தமாக புரியவில்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராகவும் தற்போதைய காலத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட சூரியகுமார் யாதவும், டி20 கிரிக்கெட்டில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் 3 சதங்களை அடித்த முதல் நடு வரிசை வீரர் போன்ற பெருமைகளை சூரிய குமார் யாதவ் படைத்தார்.

புவனேஸ்வர் குமார் வேண்டாம்.. இவரை அழைத்து செல்லுங்கள்.. டேனிஷ் கனேரியா இந்தியாவுக்கு அறிவுரை புவனேஸ்வர் குமார் வேண்டாம்.. இவரை அழைத்து செல்லுங்கள்.. டேனிஷ் கனேரியா இந்தியாவுக்கு அறிவுரை

கபில் தேவ் ஆச்சரியம்

கபில் தேவ் ஆச்சரியம்

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் சேர்க்கப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கபில்தேவ், ஆட்டநாயகன் விருது வாங்கியவரை எப்படி நீங்கள் அடுத்த போட்டிகளில் தூக்குவீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரே வீரர்களை அணியாக நீங்கள் கொஞ்சம் காலத்துக்கு பயன்படுத்த வேண்டும். நீங்கள் ஏதேனும் ஒரு வீரரை வேண்டுமானாலும் மாற்றலாம்.

எப்படி நீக்குவீர்கள்

எப்படி நீக்குவீர்கள்

அது குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆட்ட நாயகன் விருது வென்ற வீரரை அடுத்த போட்டியில் எப்படி நீங்கள் நீக்குவீர்கள். அதற்கு பதிலாக சம்பந்தமே இல்லாத ஒரு வீரர் அணிக்குள் வருகிறார். இந்த நடைமுறையை ஒரு கிரிக்கெட் வீரராக என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்த முடிவை நான் கிரிக்கெட் வாரியத்திடமே ஒப்படைத்து விடுகிறேன்.

3 அணியை உருவாக்குங்கள்

3 அணியை உருவாக்குங்கள்

தேர்வுக் குழுவினர் எந்த முறையில் அணியை தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்து கிரிக்கெட் வாரியம் தான் யோசிக்க வேண்டும். தற்போது இந்தியாவில் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நீங்கள் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும். சூழல் இப்படி இருக்க நீங்கள் மூன்று இந்திய அணியை உருவாக்க வேண்டும்.டி20க்கு ஒரு அணியும், ஒரு நாள் போட்டிக்கு ஒரு அணியும் டெஸ்ட் போட்டிக்கு ஒரு அணியும் மூன்று அணியை நீங்கள் உருவாக்குங்கள்.

வாய்ப்புக்காக காத்திருப்பு

வாய்ப்புக்காக காத்திருப்பு

உங்களிடம் பல திறமையான வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கபில்தேவ் கூறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்குகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை என்ற காரணத்தால் மட்டுமே சூரிய குமாரும் ஒரு நாள் அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, January 20, 2023, 22:08 [IST]
Other articles published on Jan 20, 2023
English summary
Kapil dev slams Indian team selection and asks to create 3 teams ஆட்டநாயகன் விருது வென்றவரை எப்படியா நீக்குவீங்க? ஒன்னுமே எனக்கு புரியல.. கபில்தேவ் காட்டம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X