அதிவேக 5,000 ரன்கள் சாதனை... விராட் கோலியையே மிஞ்சுட்டாரு பஞ்சாப் கிங்ஸ் கேப்டன்

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் 14வது போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 120 ரன்களை எடுத்துள்ளது.

இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய கேப்டன் கே எல் ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

கொஞ்சமாச்சும் அப்படி நடந்துக்கனும்..ஹர்திக்கின் செயலால் கிண்டலடிக்கும் முன்னாள் வீரர்.. காரணம் என்ன?

ஆயினும் இன்றைய போட்டியில் டி20 வடிவத்தில் அவர் சிறப்பான தனது சாதனையை முடித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன்

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் டி20 வடிவத்தில் சிறப்பான பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார். ஐசிசி டி20 வடிவ போட்டிகளின் தரவரிசையில் எப்போதும் முதல் 10 இடங்களில் அவர் இடம்பெற்று விடுவார். இதேபோல ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சிறப்பான வீரராகவும் கேப்டனாகவும் விளங்கி வருகிறார்.

 ஆரஞ்ச் கேப் வின்னர்

ஆரஞ்ச் கேப் வின்னர்

கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய கே எல் ராகுல், ஐபிஎல்லில் 14 போட்டிகளில் விளையாடி 670 ரன்களை பெற்று ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றினார். தொடர்ந்து தற்போதைய ஐபிஎல் 2021 சீசனிலும் அவர் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 அரைசதங்களை அடித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 91 ரன்களை அவர் குவித்திருந்தார்.

120 ரன்களை அடித்த பஞ்சாப்

120 ரன்களை அடித்த பஞ்சாப்

இன்றைய சன்சைரர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 120 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அணியில் இரண்டு புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த புதிய அணி சிறப்பான வெற்றிகளை கொடுக்க சிறிது அவகாசம் தேவைப்படும் என்றும் தாங்கள் மீண்டும் வெற்றிகளை பெறுவோம் என்றும் ராகுல் போட்டிக்கு முன்னதாக தெரிவித்துள்ளார்.

டி20 வடிவத்தில் சாதனை

டி20 வடிவத்தில் சாதனை

இந்நிலையில், கே எல் ராகுல் இன்றைய போட்டியில் ஒரு சிறப்பான சாதனையை எட்டியுள்ளார். அவர் டி20 வடிவத்தில் அதவேகமாக 5000 ரன்களை பூர்த்தி செய்ய 1 ரன் மட்டுமே தேவையாக இருந்த நிலையில், அதை சிறப்பாக அடித்து அந்த சாதனையை எட்டியுள்ளார். ஆயினும் 4 ரன்களில் அவுட்டானார்.

முறியடித்த ராகுல்

முறியடித்த ராகுல்

இதன்மூலம் கேப்டன் விராட் கோலியின் முந்தைய சாதனையை ராகுல் முறியடித்துள்ளார். விராட் கோலி 162 போட்டிகளில் விளையாடி தனது அதிவேக 5000 ரன்கள் சாதனையை எட்டியுள்ள நிலையில், தற்போது கே எல் ராகுல் 143 டி20 போட்டிகளிலேயே அதை முறியடித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
A couple of wins and the belief will be back -Rahul said
Story first published: Wednesday, April 21, 2021, 17:43 [IST]
Other articles published on Apr 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X