கேரளாவில் கால்பந்து விளையாடியவருக்கு சிஎஸ்கேவில் இடம்.. காரணம் இருக்கு மக்களே!

Posted By:

சென்னை: ஐபிஎல் போட்டிக்கான ஏலம் கடந்த சனி மாற்று ஞாயிறு ஆகிய நாட்களில் நடந்தது. சென்னை அணி கடைசி நேரத்தில் நிறைய புதிய வீரர்களை எடுத்தது.

யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் 266 வது நபராக வந்த ஆசிப் கேஎம் என்ற வீரர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவரை ஒரே ஒரு முறை மட்டும் மும்பை அணி கேட்டது.

இந்த வீரர் யார் என்றே பல அணிகளுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இவரை ஏலம் எடுத்ததிற்கு பின் மிக முக்கியமான காரணம் இருக்கிறது.

ஆசிப்

ஆசிப் கேஎம் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.40 லட்சம் கொடுத்து ஆசிப் கேஎம் ஏலம் எடுக்கப்பட்டார். கேரளாவை சேர்ந்த இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இதற்கு முன் இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை.

கால்பந்து

கால்பந்து

இவர் முதலில் கால்பந்து வீரராக இருந்துள்ளார். 10 வது வரை கேரளாவில் நடந்த பள்ளி அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதற்கு பின்பே கிரிக்கெட் பக்கம் ஒதுங்கியுள்ளார்.

நோ ரஞ்சி

நோ ரஞ்சி

இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடியதில்லை. கேரளா அணிக்காக ரஞ்சி போட்டியில் கூட விளையாடியதில்லை. ஐபிஎல் அணிகளில் பலருக்கு இவர் யார் என்றே தெரியவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

இவர் சையது அலி முஸ்தபா கோப்பை தொடரில் மட்டும் கேரளா அணிக்காக விளையாடி இருக்கிறார். அதுவும் இரண்டும் போட்டிகளில் 5 விக்கெட் எடுத்து இருக்கிறார். இவருடைய ஒரே சிறப்பம்சம் எல்லா பந்தும் 145 வேகம் வரை போடக்கூடியவர் என்பதே ஆகும். சென்னை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் குறைவை ஈடுகட்ட இவர் எடுக்கப்பட்டுள்ளார்.

பத்திரிக்கைக்கு பேட்டி

பத்திரிக்கைக்கு பேட்டி

இவர் அளித்த பேட்டியில் ''நான் பத்தாவது வரை கிரிக்கெட் விளையாடவே இல்லை. ஆனால் அதன்பின் இதுவே எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டாக மாறிவிட்டது.சென்னை அணிக்காக விளையாடுவேன் என்று நினைக்கவே இல்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
CSK took lot of other state players in the team.The name of K M Asif came up for bidding on the second morning of the IPL auction last weekend. To be precise, he was the 266th player to go under the hammer. He has not played a Ranji Trophy yet for his state and all he has to show is five wickets from two matches in the Syed Muhstaq Ali Trophy and the reputation as someone who can bowl over 145 kmph.
Story first published: Wednesday, January 31, 2018, 13:44 [IST]
Other articles published on Jan 31, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற