ஐபிஎல்லின் மேட்ச் வின்னர் இவர்தான்.. சென்னை சூப்பர் கிங்ஸ் நம்பி இருக்கும் இங்கிலாந்து வீரர்!

Posted By:

பெங்களூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய வீரர்கள் பலர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். புதிய சென்னை அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள்.

இந்த சென்னை கண்டிப்பாக கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல் சென்னை அணியின் பவுலிங் ஆர்டரும் மிகவும் வலுவாக இருக்கிறது.

சென்னை அணியின் மேட்ச் வின்னர் என்ற இடத்தில் நீண்ட காலமாக ரெய்னா இருந்து வந்தார். தற்போது அந்த இடத்திற்கு ஒரு இங்கிலாந்து வீரர் வந்துள்ளார்.

எத்தனை கோடி

எத்தனை கோடி

ஏலத்தில் மார்க் உட் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 1.5 கோடி கொடுத்து மார்க் உட் ஏலம் எடுக்கப்பட்டார். ஆல்ரவுண்டரான இவர் சென்னை அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார்.

எத்தனை ஆல்ரவுண்டர்

எத்தனை ஆல்ரவுண்டர்

சென்னை அணியில் மொத்தம் 11 ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். பிராவோ, ஜடேஜா, கேதார் ஜாதவ், ஷேன் வாட்சன், மிட்சல் சாண்டர், தீபக் சாஹர், மார்க் உட், கனிஷ்க் சேத், துருவ் ஷோரி, சிட்ஸ் சர்மா, சைத்தானியா பிஸ்நோய் ஆகியோர் ஆவர். அனைத்து வயதினரும் இதில் கலந்து இருக்கிறார்கள்.

வின்னர்

வின்னர்

இவர்தான் சென்னை அணிக்கு மேட்ச் வின்னராக இருப்பார் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை அணியில் நிறைய ஆல்ரவுண்டர் இருந்தாலும் மார்க் தனி மார்க் போடுவார் என்று அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

மார்க் பேட்டி

மார்க் பேட்டி

இதுக்குறித்து இவரே பேட்டி அளித்துள்ளார். அதில் ''எனக்கு சென்னை அணியில் விளையாடுவது மிகவும் சந்தோசம் அளிக்கிறது. மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். டோணி தலைமையின் கீழ் விளையாடுவது இப்போதே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது'' என்றுள்ளார்.

Story first published: Friday, March 2, 2018, 15:39 [IST]
Other articles published on Mar 2, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற