பாயிண்ட்ஸ் டேபிள்ல மும்பை எங்க?.. நெட்டிசன்கள் அலம்பல்.. ரோஹித் அணியை துரத்தும் மீம்கள்!

Posted By:

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி 2018 ஐபிஎல்லில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் தற்போது பாயிண்ட்ஸ் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.

நடப்பு சாம்பியன் அணியா இப்படி விளையாடுவது என்று எல்லோரும் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். அணியில் நல்ல வீரர்கள் இருந்தும் அந்த அணி எப்படியோ தோல்வியை தழுவுகிறது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். நெட்டிசன்கள் மீம் போட்டு கிண்டல் செய்துள்ளனர்.

மும்பை எங்கடா

இவர் ''எங்கடா பாயிண்ட்ஸ் டேபிள்ல எம்ஐயவே காணோம். இப்படி பாத்தா எப்படி தெரியும், நல்ல கீழ போய் பாருங்க'' என்று கலாய்த்துள்ளார்.

எத்தனை மேட்ச்

இவர் ''இதுவரைக்கு மூனுபோட்டியில தோத்து இருக்கேன், சரி எத்தனை போட்டியில விளையாண்டு இருக்கீங்க? மூனு போட்டியிலதான் விளையாண்டு இருக்கேன்'' என்று கலாய்த்துள்ளார்.

மூன்று மேட்ச்

இவர் ''என்ன ஒன்னு, ரெண்டு, மூனுன்னு எண்ணிக்கிட்டு இருக்க. மூனு மேட்சுக்கு மேல போன ஜெயிக்கிற மாதிரியே?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் எத்தனை மேட்ச் பாஸ்

முதலில் மும்பை இரண்டு போட்டிகளை தோற்ற போது , வெறும் இரண்டு போட்டிகள்தான் என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அமைதியாக இருந்தார்கள். ஆனால் இன்னும் எத்தனை 2 போட்டிகளை மும்பை தோற்க போகிறது என்று தெரியவில்லை என்று இவர் மீம் போட்டு இருக்கிறார்.

இதயம் இந்த இதயம்

மும்பை இந்தியன்ஸ் அணி மேட்ச்தான் ஜெயிக்க முடியல மக்களோட இதயத்தை ஜெயிக்கட்டும் என்று காமெடி செய்துள்ளார்.

ஆதரவு தெரிவித்தார்

இவர் ''பொறுப்பா அடுத்த மேட்ச் ஜெயிப்போம்'' என்று மும்பைக்கு காமெடியாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Memes on Mumbai Indians 3 match loss in IPL 2018.
Story first published: Sunday, April 15, 2018, 12:14 [IST]
Other articles published on Apr 15, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற