என்னாது... ஐபிஎல்லுக்காக இங்கிலாந்து தொடரை மிஸ் பண்ணனுமா... சரிபட்டு வராது... வில்லியம்சன் உறுதி!

வெல்லிங்டன் : ஐபிஎல் தொடருக்காக, நியூசிலாந்து -இங்கிலாந்து தொடரை தவிர்ப்பது சரியாக வராது என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஜூன் மாதத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், ஐபிஎல்லின் ப்ளே-ஆப் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் அதுவும் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

292 வீரர்கள்.. 8 அணிகள்.. தொடங்கியது ஐபிஎல் 2021 ஏலம்.. தமிழக வீரர்களுக்கு ஸ்கெட்ச்.. முழு பின்னணி!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக கேன் வில்லியம்சன் இந்த ஐபிஎல் சீசனில் ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல், மே மாதங்களில் தொடர்

ஏப்ரல், மே மாதங்களில் தொடர்

ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஐபிஎல் ஏலம் கடந்த 18ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதற்கான தேதி மற்றும் இடம் குறித்து பிசிசிஐ இன்னும் அறிவிக்காமல் உள்ளது. விரைவில் அறிவிக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் இங்கிலாந்து தொடர்

ஒரே நேரத்தில் இங்கிலாந்து தொடர்

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடவுள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். ஜூன் மாதத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டுள்ளதால், ஐபிஎல் மற்றும் அந்த தொடர் இரண்டும் ஒரே நேரத்தில்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சேபனை இல்லை

ஆட்சேபனை இல்லை

இதையடுத்து கேன் வில்லியம்சன் உள்ளிட்ட நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல்லின் ப்ளே-ஆப் சுற்றுகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், ஐபிஎல்லின் மொத்த தொடரிலும் அவர்கள் பங்கேற்க ஆட்சேபனை இல்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட்டின் செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் பூச் தெரிவித்துள்ளார்.

தவிர்ப்பது சரியாக இருக்காது

தவிர்ப்பது சரியாக இருக்காது

ஐபிஎல்லுக்காக இங்கிலாந்து தொடரை தவிர்ப்பது சரியாக வராது என்று கேப்டன் கேன் வில்லியம்சன் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆயினும் இரண்டு தொடர்களின் தேதிகளும் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தற்போது இதுகுறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
We have to wait and see when dates are finalised before any decision -Kane Williamson
Story first published: Sunday, February 21, 2021, 17:28 [IST]
Other articles published on Feb 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X