For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தனியாக போராடி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினாலும், அணிக்கு வெற்றியை அர்ப்பணம் செய்த பாசக்கார டோணி!

By Veera Kumar

இந்தூர்: தனியாளாக நின்று போராடி ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்திய வெற்றிக்கு உதவினாலும்கூட, இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூலாக சொன்னார் அணியின் கேப்டன் டோணி.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இந்தூரில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த இந்தியா, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து தடுமாறியது.

கடைசிவரை போராட்டம்

கடைசிவரை போராட்டம்

மோசமான நிலையிலும், டெய்ல் என்டர் பேட்ஸ்மேன்களுடன் இணைந்து கடைசி வரை போராடிய கேப்டன் டோணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் என்ற டீசன்டான ஸ்கோரை எட்டச் செய்தார்.

கடைசி கட்ட அதிரடி

கடைசி கட்ட அதிரடி

40 ஓவர்களில் இந்தியா 165 ரன்கள்தான் எடுத்திருந்த நிலையில், கடைசி 10 ஓவரில் மட்டும் 82 ரன்கள் சேகரிக்கப்பட்டன. கடைசிகட்ட பேட்ஸ்மேன்களுடன் நல்ல அன்டர் ஸ்டாண்டிங் வைத்துக்கொண்டு அதிகப்படியான ரன்களை ஓடியே எடுத்தார் டோணி.

டோணி அதிக ரன்கள்

டோணி அதிக ரன்கள்

இந்திய தரப்பில் ரஹானே அரை சதம் கடந்த உடன் அவுட் ஆனார். அதை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனும் வழக்கம்போல சோபிக்கவில்லை. ஆனால், டோணி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 பந்துகளில் 92 ரன்கள் குவித்து களத்தில் நின்றார்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

தென் ஆப்பிரிக்காவை 225 சுருட்டி வெற்றி பெற்ற பின்பு, பேட்டியளித்த டோணி கூறியதாவது: இந்த வெற்றி ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. விரைவிலேயே தென் ஆப்பிரிக்க டாப்-ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டோம். அதை பவுலர்கள் சாதித்து காட்டினர்.

பவுலர்கள் அபாரம்

பவுலர்கள் அபாரம்

ஸ்பின்னுக்கு சாதகமில்லாத பிட்சில், இந்திய ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை சாய்த்தனர். இதுபோன்ற குறைந்த ஸ்கோரிங் போட்டிகளில் பவுலர்கள் பங்களிப்புதான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதை இந்திய பவுலர்கள் செய்தனர்.

முதலில் அதிரடிக்கு திட்டம்

முதலில் அதிரடிக்கு திட்டம்

இந்திய டாப்-ஆர்டரில் பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் இன்றி போய்விட்டது. எனவே பவுலர்களுடன் இணைந்து ஆட வேண்டிய நிலை எனக்கு வந்தது. பவுலர்கள் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிப்பர் என தெரியாது என்பதால் விக்கெட் போனாலும் பரவாயில்லை, முடிந்த வரை அடித்து ஆடிவிடலாம் என்று முதலில் எண்ணினேன். பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு 50 ஓவர்கள் வரை போட்டியை இழுத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

பேட்டிங் பவுலர்கள்

பேட்டிங் பவுலர்கள்

இந்திய பவுலர்கள் சேகரித்த ரன்கள் மிகவும் உதவிகரமாக இருந்தன. பவுலர்கள் சுமார் 50 ரன்கள சேர்த்தனர். இதுபோன்ற லோ-ஸ்கோரிங் போட்டிகளில் பவுலர்கள் சேகரித்த அந்த ரன்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

பாதுகாப்பானது இல்லை

பாதுகாப்பானது இல்லை

247 ரன்கள் என்பது, இந்தூர் ஸ்டேடியத்தில் எட்டக்கூடிய ஸ்கோர்தான். இருப்பினும், அந்த ஸ்கோருக்குள் தென் ஆப்பிரிக்காவை மடக்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அது ஒரு டீசன்டான ஸ்கோர்தானே தவிர, பாதுகாப்பான ஸ்கோர் இல்லை. எனவே அடுத்த போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டும். இவ்வாறு டோணி தெரிவித்தார்.

Story first published: Thursday, October 15, 2015, 11:37 [IST]
Other articles published on Oct 15, 2015
English summary
Mahendra Singh Dhoni might have paved the way for India's victory with an unbeaten 92 in the second cricket ODI, but the skipper preferred to credit his bowlers for the series-levelling win against South Africa here tonight.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X