2008 ஐபிஎல்லின் போது ரெண்டாம் கிளாஸ்.. இப்போது சூப்பர் பவுலர்.. பஞ்சாப் வீரர் புதிய சாதனை

Posted By:

பஞ்சாப்: ஐபிஎல் போட்டியில் மிக குறைந்த வயதில் அறிமுகமானவர் என்ற புதிய சாதனையை பஞ்சாப் வீரர் முஜீப் உர் ரஹ்மான் படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப்பும் இன்று நேருக்கு நேர் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பில் 166 ரன்கள் எடுத்தது. இதில் பஞ்சாப் வீரர் முஜீப் உர் ரஹ்மான் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்.

இளம் வீரர்

இளம் வீரர்

இவர்தான் இதுவரை ஐபிஎல் போட்டியில் அறிமுகமான வீரர்களில் இளமையானவர். இவருக்கு தற்போதைய வயது 17 வருடம் 11 நாட்கள் ஆகும். 2001 மார்ச் 28ம் தேதி இவர் பிறந்துள்ளார். இவரது சொந்த ஊர் ஆப்கானிஸ்தான் ஆகும்.

இன்னும் சிலர்

இன்னும் சிலர்

இன்னும் சந்திப் லெமிச்சனே , பிரித்வி ஷா, கமலேஷ் நாகர்கோட்டி , சுப்மான் கில் உள்ளிட்ட இவரை போன்ற இளம் வீரர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அணியில் எடுக்கப்பட்டாலும், இன்னும் 11 பேர் கொண்டு அணியில் சேர்ந்து விளையாடவில்லை. அதனால் இப்போதுவரை இளமையான வீரர் ரஹ்மான் மட்டுமே.

முந்தையை சாதனை

முந்தையை சாதனை

இதற்கு முன் மும்பையை சேர்ந்த சர்ப்ரஸ் கான் பெங்களூர் அணிக்காக விளையாடினார். இவர் 17 வருடம் 177 நாட்கள் இருக்கும் போது ஐபிஎல்லில் அறிமுகம் ஆனார். அதற்கு முன் பிரதீப் சங்வான் டெல்லி அணிக்காக அறிமுகம் ஆனார். இவரது வயது அப்போது 17 வருடம் 179 நாட்கள் ஆகும்.

சிறப்பான பவுலிங்

சிறப்பான பவுலிங்

முஜீப் உர் ரஹ்மான் தனது ஸ்பின் மூலம் எதிரணி வீரர்களை கலங்கடித்தார். 4 ஓவர் போட்ட இவர் சராசரியாக ஒரு ஓவருக்கு 7 ரன் என 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதில் 2 விக்கெட் எடுத்தார். கோலின் முன்ரோ, கம்பீர் என்ற இரண்டு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களையும் விக்கெட் எடுத்தது இவர்தான்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Mujeeb Ur Rahman becomes the youngest player to play in IPL 2018. He is just 17 years 11 days old.
Story first published: Sunday, April 8, 2018, 19:18 [IST]
Other articles published on Apr 8, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற