இரண்டு ஜெர்சி.. வீரர்களை மாற்றிக் கொள்ளும் வசதி.. ஐபிஎல் போட்டியில் தெறிக்கவிடும் 6 புதிய விதிகள்!

Posted By:

சென்னை: ஐபிஎல் 2018 போட்டியில் சில விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. சில முக்கியமான விதிகள் இந்த முறை அறிமுகம் ஆகியுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் களைகட்டிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 4 நாட்களே இருக்கிறது. வரும் சனிக் கிழமை முதல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடக்க இருக்கிறது.

முதல் போட்டி சென்னைக்கும், மும்பைக்கும் இடையில் மும்பையில் நடக்க உள்ளது.

முதல் விதி மாற்றம்

முதல் விதி மாற்றம்

ஐபிஎல் போட்டியில் ''ஸ்ட்ரேடஜிக் டைம் அவுட்'' எனப்படும் இடைவெளி கேட்கும் முறை 2009 ஐபிஎல் போட்டியில் அறிமுகம் ஆனது. அப்போது 7.30 நிமிடம் இடைவெளி அளிக்கப்பட்டது. இது 2010ல் 2.30 நிமிடமாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேட்டிங் அணி 13,14,15,16 ஆகிய ஓவர்களிலும், பவுலிங் அணி 6,7,8,9 ஓவர்களில் இந்த இடைவெளியை கேட்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

2 வது விதி

2 வது விதி

இந்த இரண்டாவது விதி மிகவும் சுவாரசியமானது. இதில் அணிகள் இரண்டு ஜெர்சிக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் போட்டிக்கு முன் 14 போட்டிகள் விளையாடும். இதில் 7 உள்ளூரில், 7 வெளி மாநிலத்தில் நடக்கும். இதில் உள்ளூருக்கு ஒரு ஜெர்சியும், வெளியூருக்கு ஒரு ஜெர்சியும் அணிந்து கொள்ளலாம். ஆனால் இந்த விதி கட்டாயம் கிடையாது.

மூன்றாவது விதி

மூன்றாவது விதி

அதேபோல் ஒரு அணியில் வீரரை எடுத்துவிட்டு, அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்தால் அவரை மற்ற அணி ஐபிஎல் தொடரின் பாதியில் வாங்கி கொள்ளலாம். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இப்படி பாதியில் மாற்றி விளையாட முடியும். அதற்கான பணத்தை அணிகள் கொடுக்க வேண்டும்.

நான்காவது விதி

நான்காவது விதி

முன்பு ஒரே நாளின் இரண்டாவது போட்டி 8 மணிக்கு தொடங்கும். தற்போது இந்த இரண்டாவது போட்டி 7 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் அதே நாளின் முதல் போட்டியின் நேரம் மாற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது. முன்பு முதல் போட்டி 4 மணிக்கு தொடங்கும். ஆனால் இதற்கான ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை.

ஐந்தாவது விதி

ஐந்தாவது விதி

இந்த ஐபிஎல் போட்டியை 'ஹாட் ஸ்டார்' ஆப்பின் மூலமும் பார்க்க முடியும். ஆனால் அதனுடன் தற்போது 'விர்சுவல் ரியாலிட்டி'' தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அங்கு இருக்கும் 'விஆர்' என்ற ஆப்ஷனை அழுத்தி நாம் 'விர்சுவல் ரியாலிட்டியில்' போட்டியை பார்க்கலாம். இதில் பார்ப்பது அப்படியே நேரில் பார்ப்பதை போல இருக்கும். நாம் எப்போது வேண்டுமானாலும் கேமராவின் கோணத்தை மாற்றி பிடித்த இடத்தை பிடித்த வீரரை பார்க்கலாம். வீடியோவை நிறுத்தி, பின் நோக்கி சென்று என நாமே அங்கு இருக்கும் கேமரா மேன் போல ஆங்கிள் மாற்றி விளையாட்டை ரசிக்கலாம். ஆறாவது விதி அதேபோல் இந்த ஐபிஎல் போட்டியில் டிஆர்எஸ் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஒரு அணி ஒரு இன்னிங்சில் ஒரு முறை மட்டுமே டிஆர்எஸ் முறையை பயன்படுத்த முடியும். வரும் காலங்களில் சாதாரண போட்டிகள் போல இரண்டு முறை பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்படலாம்.

ஆறாவது விதி

ஆறாவது விதி

அதேபோல் இந்த ஐபிஎல் போட்டியில் டிஆர்எஸ் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஒரு அணி ஒரு இன்னிங்சில் ஒரு முறை மட்டுமே டிஆர்எஸ் முறையை பயன்படுத்த முடியும். வரும் காலங்களில் சாதாரண போட்டிகள் போல இரண்டு முறை பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்படலாம்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
New 6 rules introduced in IPL 2018 for great experiences.
Story first published: Tuesday, April 3, 2018, 15:58 [IST]
Other articles published on Apr 3, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற