ஐபிஎல்லுக்காக ஓய்வில்லாமல் விளையாடிட்டாங்க... 2 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்த நியூசிலாந்து டீம்!

வெல்லிங்டன் : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வரும் 27ம் தேதி முதல் அந்த அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது.

வரும் 27ம் தேதி துவங்கி 3 போட்டிகளை கொண்ட சர்வதேச டி20 மற்றும் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் 2020 சீசனில் பங்கேற்று விளையாடிய கேன் வில்லியம்சன் மற்றும் டிரெண்ட் போல்ட் இருவருக்கும் முதலில் துவங்கவுள்ள டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியோட கேப்டனாகறதுக்கு எல்லா தகுதியும் அவருக்கு இருக்கு... ஷ்ரேயாஸ் குறித்து ஆஸி கீப்பர்

27ம் தேதி துவக்கம்

27ம் தேதி துவக்கம்

நியூசிலாந்தில் வரும் 27ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ள சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் மோதுவதற்காக அந்நாட்டிற்கு மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இம்மாதம் 27ம் தேதி டி20 போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், அடுத்த மாதத்தில் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது.

வெற்றி பெற்ற நியூசிலாந்து

வெற்றி பெற்ற நியூசிலாந்து

இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வெற்றி கொண்டது. இதையடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னேற்றத்தை கண்டுள்ள அந்த அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு மேலும் முன்னேறவும் திட்டமிட்டுள்ளது.

வில்லியம்சன், போல்ட்டிற்கு ஓய்வு

வில்லியம்சன், போல்ட்டிற்கு ஓய்வு

இந்நிலையில் முதலில் விளையாடப்படும் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் கேன் வில்லியம்சன் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளித்துவிட்டு அடுத்ததாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அவர்களை பங்கேற்க வைக்க நியூசிலாந்து திட்டமிட்டுள்ளதாக அணியின் கோச் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

காயங்களுக்கிடையில் ஐபிஎல்

காயங்களுக்கிடையில் ஐபிஎல்

டெஸ்ட் போட்டிகளில் ப்ரெஷ்ஷாக அவர்கள் பங்கேற்கும் வகையில் இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டெட் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் காயங்களுக்கிடையில் போட்டிகளில் பங்கேற்று விளையாடியதை சுட்டிக் காட்டியுள்ள அவர், அதனால்தான் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக தேவோன் கோன்வே டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
South African-born debutant Devon Conway included in 13-man T20I squad
Story first published: Tuesday, November 17, 2020, 20:13 [IST]
Other articles published on Nov 17, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X