தினேஷ் கார்த்திக் தலைமையை ஏற்காத வடஇந்தியர்கள்.. டிவிட்டரில் தாக்குதல்

Posted By:
தினேஷ் கார்த்திக்கை எதிர்க்கும் வட இந்தியர்கள்!- வீடியோ

பெங்களூர்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு எதிராக தற்போது வடஇந்தியர்கள் டிவிட் செய்து வருகிறார்கள்.

தினேஷ் கார்த்திக் முதல்முறையாக கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இவர் குஜராத் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் 7.4 கோடி கொடுத்து கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் அணியின் கேப்டனாக தேர்வாகி இருக்கிறார். உத்தப்பா துணை கேப்டனாக தேர்வாகி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தவறு

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதில் ''மோசமான முடிவு. பட்டியலில் 4வது இடத்தை பிடிப்பதே கஷ்டம். அணி நிர்வாகம் மிகவும் மோசமான முடிவு. மோசமான கேப்டன். நல்ல கேப்டன் இல்லை, நல்ல பேட்ஸ்மேன் இல்லை, நல்ல நிர்வாகம் இல்லை.'' என்றுள்ளார்.

வலிக்கல

இவர் ''எனக்கு காலையில் விபத்து ஏற்பட்டது. ஆனால் கேகேஆர் முடிவை பார்க்கும் எனக்கு வலியை மறந்து சிரிப்பு வருகிறது'' என்றுள்ளார்.

ஐபிஎல் பார்க்க மாட்டேன்

இவர் ''இந்த முறை நான் ஐபிஎல் பார்க்க போவதில்லை. கொல்கத்தா அணி கண்டிப்பாக கடைசி இடத்திற்குத்தான் வரும்'' என்றுள்ளார்.

வெளியே செல்வார்கள்

இவர் ''இது மிக மிக மோசமான முடிவு. கொல்கத்தா அணிதான் முதலில் வெளியே போக போகிறது. தினேஷ் கார்த்திக் தலைமைக்கு தகுதியானவர் இல்லை'' என்றுள்ளார்.

Story first published: Sunday, March 4, 2018, 14:54 [IST]
Other articles published on Mar 4, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற