For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏ…. தோஸ்த்து கீ…..!! ஹிட்மேனுக்கு ஹேப்பி பர்த்டே வாழ்த்து சொன்ன மீசை முறுக்கி வீரர்

மும்பை: கிரிக்கெட்டிலும், கிரிக்கெட்டுக்கு வெளியிலும் இந்த பார்ட்னர்ஷிப் என்றென்றும் தொடரும் என்று தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரோகித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய சர்வதேச கிரிக்கெட் அணிக்கு துவக்க வீரரும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டைனாகவும் இருந்து வரும் ரோகித் ஷர்மா. ஹிட்மேன் என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.

2007-ம் ஆண்டு, அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் அவர் அறிமுகமானார். இந்திய அணிக்காக இதுவரை 206 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.. பொறுக்க முடியாமல் அதை மாற்றிய வங்கதேச கிரிக்கெட் வாரியம்.. இப்போ ஹேப்பி வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.. பொறுக்க முடியாமல் அதை மாற்றிய வங்கதேச கிரிக்கெட் வாரியம்.. இப்போ ஹேப்பி

இரட்டை சதம்

இரட்டை சதம்

இவர் இதுவரை எவரும் நிகழ்த்திராத சாதனையாக ஒருநாள் போட்டிகளில 3 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். அதேபோல் 7 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

267 ரன்கள் சாதனை

267 ரன்கள் சாதனை

ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 8,010 ரன்கள் எடுத்திருக்கும் ரோகித், 22 சதம், 41 அரை சதங்களையும் அடித்துள்ளார். 2014ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில், 267 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

அதிகபட்ச ரன்கள்

அதிகபட்ச ரன்கள்

ஒரு நாள் போட்டியின் ஒரு இன்னிங்ஸில், தனி நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2013ம் ஆண்டு முதல், தவானுடன் சேர்ந்து இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார்.

கலக்கல் ஜோடி

கலக்கல் ஜோடி

இதுவரை 101 இன்னிங்ஸில் ஓப்பனிங் களமிறங்கியுள்ள இந்த இணை, 4,541 ரன்கள் சேர்த்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் அதிக முறை இரட்டைச் சதம் அடித்தவர், ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள், அதிக சிக்சர்கள், பவுண்டரிகள் மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

2வது இடம்

2வது இடம்

ஒரு நாள், டி 20 கிரிக்கெட் போட்டிகளின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் ஷர்மா. ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எத்தனையோ பேர் வாழ்த்து தெரிவித்தாலும், கிரிக்கெட்டில் அவரது இணையான தவானின் வாழ்த்து தான் ஸ்பெஷல். கிரிக்கெட்டிலும், கிரிக்கெட்டுக்கு வெளியிலும் இந்த பார்ட்னர்ஷிப் என்றென்றும் தொடரும் என்று பார்ட்னர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் நம்பிக்கை

ரசிகர்கள் நம்பிக்கை

மே 30-ம் தேதி தொடங்க இருக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரோகித், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை பெற்று தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, May 1, 2019, 12:49 [IST]
Other articles published on May 1, 2019
English summary
Our everlasting partnership on and off the field, dhawan wishes hitman rohit sharma on his birthday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X