For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓடு… வரிசையில் நில்லு… இந்த பக்கம் வராதே… ஐபிஎல் ரசிகர்களை லத்தியால் வெளுத்த சென்னை போலீஸ்

சென்னை:சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்களை போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை ஐபிஎல் தொடருக்கான அட்டவணை முதல் இரு வாரங்களுக்கு மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 23ம் தேதி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

என்னாச்சு..? மும்பை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு ஒட்டுமொத்தமாக ராஜினாமா என்னாச்சு..? மும்பை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு ஒட்டுமொத்தமாக ராஜினாமா

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

அந்த போட்டிக்கான டிக்கெட் வினியோகம் இன்று தொடங்கியது. அவற்றை ங்க விடிய, விடிய ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களில் பலர் வரிசையில் அமர்ந்த படியே உறங்கி போயினர்.

டிக்கெட் கட்டணங்கள்

டிக்கெட் கட்டணங்கள்

போட்டிக்கு 1300 ரூபாய், 2500 ரூபாய் 5000 ரூபாய், 6500 ரூபாய் கட்டண வகைகள் உள்ளன. மொத்தம் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

வாகனங்கள் பறிமுதல்

வாகனங்கள் பறிமுதல்

டிக்கெட் வாங்க வந்தவர்கள் தங்கள் வாகனங்களை சாலையிலேயே விட்டுச் சென்றனர். அவற்றால் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டதையடுத்து போலீசார் அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

லேசான தடியடி

லேசான தடியடி

மேலும், டிக்கெட்டை வாங்க அதிகமான ரசிகர்கள் குவிந்ததால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். கூட்டத்தில் இருந்தவர்களை ஒழுங்குப்படுத்தி விரைவாக டிக்கெட் வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினர். காவிரி பிரச்சனை தொடர்பான போராட்டம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 16, 2019, 18:42 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
The police had a lazy baton for fans who waiting to buy IPL tickets at the Chennai Chepauk Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X