For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் தப்பு பண்ணல..! என் சாடையில யாரோ போய் பண்ணிட்டாங்க..! விருமாண்டி விளக்கம் சொன்ன பவுலர்

புளோரிடா: அம்பயரின் உத்தரவை மீறி, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று பொலார்டு திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டியின் நடுவில் மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2வது போட்டியில் அம்பயரின் உத்தரவுகளை மீறியதாக, ஸ்டார் பிளேயர் கெய்ரன் பொல்லார்டு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போட்டி நடந்து கொண்டிருக்கும் போது பொல்லார்டு, அம்பயரின் அனுமதியின்றி மாற்று வீரரை களத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

என்ன நடைமுறைகள்?

என்ன நடைமுறைகள்?

வழக்கமாக மாற்று வீரரை அழைக்க வேண்டுமென்றால் சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் அம்பயரிடம் வேண்டுகோள் வைக்க வேண்டும். அவர் அனுமதி தந்த பிறகே அழைக்க வேண்டும்.

தொடர் விசாரணை

தொடர் விசாரணை

ஆனால் அம்பயர், அடுத்த ஓவர் முடியும் வரை காத்திருக்குமாறு பலமுறை கூறியதாக தெரிகிறது. ஆனால் அதை எல்லாம் கொஞ்சமும் ஏற்காமல் பொல்லார்டு, தொடர்ந்து மாற்று வீரரை அழைத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விசாரணையும் நடத்தப்பட்டது.

நிரூபணமானது

நிரூபணமானது

பொல்லார்டு செய்தது தவறு என்பது நிரூபணமானது. எனவே, அவருக்கு ஆட்டத் தொகையில் 20% அபராதமும், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டது. 24 மாத காலத்திற்குள் பொல்லார்டு 4 அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றால் அது நீக்க புள்ளியாக கவனத்தில் கொள்ளப்படும்.

திட்டவட்ட மறுப்பு

திட்டவட்ட மறுப்பு

அதன் பிறகு, அவர் ஓரிரு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம். ஆனால் தான் எந்தத் தவறும் செய்ய வில்லை என பொல்லார்டு இந்த குற்றச் சாட்டை திட்டவட்டமாக மறுத்து கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 6, 2019, 20:13 [IST]
Other articles published on Aug 6, 2019
English summary
Pollard explanation about his demerit points against Indian t 20 match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X