For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எதுவும் சொல்றதுக்கு இல்லங்க” பேட்டிங் போராட்டத்திற்கு பின் ரோகித்-க்கு என்ன ஆனது? டிராவிட் ஆதங்கம்

டாக்கா: வங்கதேசத்துடனான கடும் போராட்டத்திற்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் உடல்நிலை என்ன ஆனது என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி நேரத்தில் வங்கதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு சரிய 69 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து திணறியது.

இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..வங்கதேசத்தை எதிர்கொள்ள மெகா திட்டம் இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..வங்கதேசத்தை எதிர்கொள்ள மெகா திட்டம்

3வது ஒருநாள் போட்டி

3வது ஒருநாள் போட்டி

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த முகமதுல்லா மெஹிடி ஹாசன் மிராஸ் ஜோடி அணியை மீட்டுக்கொண்டு வந்தனர். சிறப்பாக விளையாடிய முகமதுல்லா 77 ரன்களும், மெஹிடி ஹாசன் 100 ரன்களையும் விளாசினர். இதனால் வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்களை குவித்தது. இதனை இந்தியா சுலபமாக விரட்டும் என எதிர்பார்த்த சூழலில் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்திய அணி இன்னிங்ஸ்

இந்திய அணி இன்னிங்ஸ்

இந்திய அணியில் தவான், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொதப்ப, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். ஃபீல்டிங்கின் போது காயமடைந்த ரோகித் சர்மாவும் டாப் ஆர்டரில் விளையாடவில்லை. 213 /8 என்ற இக்கட்டான சூழலில் காயத்தையும் பொருட்படுத்தாமல் ரோகித் சர்மா பேட்டிங்கிற்கு வந்தார். அவர் ஆடிய இன்னிங்ஸ் வங்கதேசத்தை கலங்கடித்தது.

ரோகித் கடும் போராட்டம்

ரோகித் கடும் போராட்டம்

கை விரல்களில் காயத்தால் அவதிப்பட்டு வந்த ரோகித் சர்மா, அதனையும் பொருட்படுத்தாமல் அதிரடியாக 28 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற சூழலில் ஒரே ஒரு ரன் மட்டுமே வந்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

டிராவிட் பேச்சு

டிராவிட் பேச்சு

இந்நிலையில் ரோகித்தின் நிலை குறித்து ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அதில், இந்திய அணியில் சில காய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது மிகவும் கடினமான தருணம் ஆகும். ரோகித் சர்மா உடனடியாக மும்பைக்கு செல்லவுள்ளார். அங்கு நிபுணர்களிடம் காயம் குறித்து பரிசோதனை நடத்திவிட்டு, அதன்பின்னர் தான் டெஸ்ட் தொடருக்காவது வருவாரா என்பது தெரியும்.

எதுவும் கூற முடியாது

எதுவும் கூற முடியாது

என்னைப்பொறுத்தவரையில் தீபக் சஹார் மற்றும் ரோகித் சர்மா அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்கள். குல்தீப் யாதவும் தொடரில் இருந்து விலகியுல்ளார். காயத்தின் தன்மை குறித்து தற்போதே எதுவும் சொல்ல முடியாது. ஆனால் 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் நிச்சயம் இருக்க மாட்டார் என டிராவிட் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 8, 2022, 9:17 [IST]
Other articles published on Dec 8, 2022
English summary
Team India Head Coach Rahul dravid opens up about the Rohit sharma's Injury after the lose against Bangladesh in 3rd ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X