For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஞ்சி கிரிக்கெட்டில் அசத்திய ஜடேஜா.. பந்துவீச்சில் விக்கெட் வேட்டை.. கம்பீருக்கு தக்க பதிலடி

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளங்கி வருபவர் ரவீந்திர ஜடேஜா. ஆனால் காயம் காரணமாக கடந்த 4 மாதமாக எந்த போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.

ஜடேஜா இல்லாத நேரத்தில் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டு, தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். இதனால் ஜடேஜா அணிக்கு அவ்வளவு எளிதாக திரும்ப முடியாது என்று கம்பீர் கருத்து தெரிவித்து இருந்தார்.

டெஸ்ட் அணியில் கூட அஸ்வின், அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தங்களது இடத்தை பிடித்து கொண்டதால், ஜடேஜாவின் முக்கியத்துவம் கேள்வி குறியானது.

“சூர்யகுமார் இல்லாமல் இனி இந்திய அணி இல்லை” ரெய்னாவின் புகழ்ச்சி வார்த்தைகள்.. ரசிகர்கள் வியப்பு “சூர்யகுமார் இல்லாமல் இனி இந்திய அணி இல்லை” ரெய்னாவின் புகழ்ச்சி வார்த்தைகள்.. ரசிகர்கள் வியப்பு

ரஞ்சி போட்டி

ரஞ்சி போட்டி

இந்த நிலையில், ஜடேஜா தனது உடல் தகுதியையும், ஃபார்மையும் நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக கடந்த 24ஆம் தேதி ரஞ்சி போட்டியில் சௌராஷ்டிரா அணிக்கு தலைமை தாங்கி தமிழக அணிக்காக களமிறங்கினார்.

 உடல் தகுதி

உடல் தகுதி

இதில், சென்னை சேப்பாக்கத்தில் விளையாடிய ஜடேஜா, முதலில் பந்துவீசினார். முதல் இன்னிங்சில் அவருடைய பந்தவீச்சில் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும், 24 ஓவர்களை வீசி 48 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஜடேஜா தனது உடல் தகுதியை நிரூபித்தாலும், அவருடைய பழைய பந்துவீச்சு தென்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

ஜடேஜா பேட்டிங்

ஜடேஜா பேட்டிங்

தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சௌராஷ்டிரா அணியில் பேட்டிங் செய்த ஜடேஜா, 3 பவுண்டரிகளை அடித்து 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ஜடேஜா 2வது இன்னிங்சில் பந்துவீசினார். ஆடுகளமும், சுழற்பந்துவீச்சுக்கு சாகமாக செயல்பட, ஜடேஜா, தனது பழைய பந்தவீச்சை வெளிப்படுத்தி விக்கெட் வேட்டையை நடத்தினார்.

7 விக்கெட்டுகள்

7 விக்கெட்டுகள்

ஜடேஜா பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாத தமிழக அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார். 17 ஓவர்களை வீசிய ஜடேஜா, 53 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் தமிழக அணி 2வது இன்னிங்சில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடஜோ தற்போது பந்துவீச்சில் பார்ம்க்கு திரும்பிய நிலையில் பேட்டிங்கிலும் அடித்து ஆடினால் இனி கலக்கல் தான்.

Story first published: Thursday, January 26, 2023, 18:01 [IST]
Other articles published on Jan 26, 2023
English summary
Ranji trophy 2023 - Ravindra jadeja bags 7 wickets in 2nd innings vs tamilnadu ரஞ்சி கிரிக்கெட்டில் அசத்திய ஜடேஜா.. பந்துவீச்சில் விக்கெட் வேட்டை.. கம்பீருக்கு தக்க பதிலடி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X