சிஎஸ்கே பஞ்சாப் மோதும் போட்டி.. டோணியை எதிர்கொள்ளும் கேப்டன் அஸ்வின்.. என்ன நடக்குமோ?

Posted By:
டோனியை எதிர்க்க போகும் அஸ்வின்...என்னெல்லாம் நடக்க போகுதோ?- வீடியோ

சென்னை: ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி மோத இருக்கிறது. இதனால் கேப்டன் அஸ்வின், கேப்டன் டோணி இருவரும் முதல்முறையாக ஒருவருக்கு ஒருவர் எதிராக ஆட இருக்கிறார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது. அவர் அஸ்வின் கேப்டன் ஆகி இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதேபோல அவரது டிவிட்டும் வைரல் ஆகி இருக்கிறது.

அறிவிப்பு

முன்பே அஸ்வின்தான் இனி பஞ்சாப் அணியின் கேப்டனா என்பது போல இவர் கேள்வி எழுப்பி இருந்தார்கள். தற்போது அது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து பஞ்சாப் அணி டிவிட்டரில் எங்கள் புதிய கேப்டன் என்று டிவிட் செய்து இருக்கிறது.

மோதும் போட்டி

இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் பஞ்சாப் அணியும் ஏப்ரல் 15ல் மோத இருக்கிறது. இரவு 8 மணிக்கு இந்த போட்டி இந்தூர் மைதானத்தில் நடக்கும். இதில் அஸ்வினும் டோணியும் முதல்முறையாக மோதுகிறார்கள்.

ஏன் கூடாது

இவர் ''டோணி கேப்டனாக இருக்கும் போது அஸ்வின் கேப்டனாக இருக்க கூடாதா?'' என்று இந்த அஸ்வின் ஃபேன் கேட்டு இருக்கிறார். வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

மிஸ்டர் அஸ்வின்

இவர் ''அஸ்வின் அடிச்ச மணி சென்னைக்கு கேட்டுச்சோ இல்லையோ, பஞ்சாப்பிற்கு கேட்டுடுச்சு. அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்'' என்றுள்ளார்.

மோதும் போட்டி

இவர் சென்னை பஞ்சாப் மோதும் போட்டி குறித்து குறிப்பிட்டுள்ளார். விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி இன்ட்ரோ போல இருக்கும் என்றுள்ளார்.

Story first published: Wednesday, February 28, 2018, 14:53 [IST]
Other articles published on Feb 28, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற