200வது ஐபிஎல் கேம்... இன்னைக்கு வின் பண்றோம்... ஆர்சிபி தீவிரமா இருக்காங்க

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 16வது போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இன்றைக்கு ஐபிஎல்லின் 200வது போட்டியில் ஆர்சிபி விளையாட இருக்கு. இந்த போட்டியிலயும் பல்வேறு சாதனைகளை முறியடிக்க காத்துள்ளது ஆர்சிபி.

கேப்டன்கூட கைகோர்த்தா போதும்... நம்மோட திறமைகள் எல்லாம் வெளிய வந்துடும்.... சுந்தர் புகழ்ச்சி

க்ளென் மாக்ஸ்வெல் தன்னோட 100வது சிக்ஸ் ரெக்கார்டை பீட் செய்வதற்கு இன்னும் ஒரேயொரு சிக்ஸ்தான் மீதமுள்ளதாம்.

16வது போட்டி

16வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 16வது போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதுவரை தான் விளையாடிய 3 போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியிலில் 2வது இடத்தில் சிஎஸ்கேவிற்கு அடுத்தபடியாக உள்ளது.

3 அதிரடி வெற்றி

3 அதிரடி வெற்றி

மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுடன் இதுவரை விளையாடியுள்ள ஆர்சிபி 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளது. இன்றைய தினம் 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இரண்டில் தோல்வி

இரண்டில் தோல்வி

இதனிடையே தான் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி கண்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றி கண்டுள்ளது. இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளையும் சென்னையில் விளையாடியுள்ள ஆர்சிபி முதல் முறையாக மும்பையில் தனது போட்டியை இன்றைய தினம் விளையாடவுள்ளது.

மாக்ஸ்வெல் காத்திருப்பு

மாக்ஸ்வெல் காத்திருப்பு

இன்றைய போட்டியில் ஆர்சிபி வின்னிங் ஸ்டார் க்ளென் மாக்ஸ்வெல் ஐபிஎல்லில் தனது 100வது சிக்சை பூர்த்தி செய்ய ஒரு சிக்சே மீதமுள்ளது. இன்றைய போட்டியில் அவர் அதை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதுவரை விளையாடியுள்ள 82 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 1681 ரன்களை குவித்துள்ளார்.

இன்றைய 200வது போட்டி

இன்றைய 200வது போட்டி

மேலும் இது ஆர்சிபியின் 200வது ஐபிஎல்போட்டி. மும்பை இந்தியன்ஸ் 207 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இரண்டாவது அணியாக 200 போட்டிகளை ஆர்சிபி இன்றைய போட்டி மூலம் பூர்த்தி செய்யவுள்ளது. இதேபோல அந்த அணியின் ஏபி டீ வில்லியர்ஸ் 159 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,974 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.

26 ரன்கள் மீதம்

26 ரன்கள் மீதம்

டீ வில்லியர்ஸ் 5000 ஐபிஎல் ரன்களை பூர்த்தி செய்ய 26 ரன்களே மீதமுள்ளன. இன்றைய போட்டியில் ஐபிஎல்லில் 5,000 ரன்களை பூர்த்தி செய்த டேவிட் வார்னரை தொடர்ந்து டீ வில்லியர்ஸ் இந்த சாதனையை முடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதேபோல 6,000 ஐபிஎல் ரன்களை பூர்த்தி செய்ய விராட் கோலிக்கு இன்னும் 51 ரன்களே மீதமுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Glenn Maxwell is only 1 maximum away from completing 100 IPL sixes
Story first published: Thursday, April 22, 2021, 18:14 [IST]
Other articles published on Apr 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X