ரிஷப் பௌலர்களோட கேப்டன்... தோனியோட பாராட்டு சிலிர்ப்ப ஏற்படுத்துச்சு... இளம் வீரர் நெகிழ்ச்சி

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்த தொடரில் காயம் காரணமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விலகிய நிலையில், ரிஷப் பந்த் அணியை வழிநடத்தி வருகிறார்.

'' என்னை விட உங்க பவுலிங் செமையா இருக்கு''.. பும்ராவே மனம் திறந்து பாராட்டிய வீரர்.. யார் தெரியுமா?

இந்நிலையில் ரிஷப் பந்த் பௌலர்களின் கேப்டன் என்று அந்த அணியின் இளம் வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3ல் டெல்லி அணி வெற்றி

3ல் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் 2021 தொடரில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. அணியை இந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக வழிநடத்தி வருகிறார் இளம் வீரர் ரிஷப் பந்த். அணியின் வீரர்களின் பலமறிந்து அவர்களை சிறப்பாக பயன்படுத்தி ஆட்டத்தை சிறப்பான வழிநடத்தி வருகிறார்.

சிறப்பான பௌலர் ஆவேஷ்

சிறப்பான பௌலர் ஆவேஷ்

இதேபோல அணியின் சிறப்பான பௌலராக இந்த சீசனில் விளங்கி வருகிறார் ஆவேஷ் கான். இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஷல் படேல் மற்றம் தீபக் சஹருக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ரிஷப் குறித்து பாராட்டு

ரிஷப் குறித்து பாராட்டு

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பௌலர்களின் கேப்டனாக உள்ளதாக ஆவேஷ் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். அணியின் மூத்த வீரர்கள் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா இருந்தாலும் தனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருவதாகவும் இதற்கு தான் நன்றி கூற கடமை பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தீவிரமான கேப்டன்

தீவிரமான கேப்டன்

தன்னுடைய அணியின் பௌலர்கள் அனைவரும் அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடும்வகையில் பந்த் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் மிகவும் தீவிரமான கேப்டனாக விளங்கி வருவதாகவும் ஆவேஷ் கான் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆவேஷ் கான் மகிழ்ச்சி

ஆவேஷ் கான் மகிழ்ச்சி

கடந்த சிஎஸ்கே போட்டிக்கு பிறகு எம்எஸ் தோனியிடம் அதிகமாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தன்னிடம் தோனி, தான் சிறப்பாக விளையாடியதாகவும் தொடர்ந்து அதை செய்ய வேண்டும் என்றும் பாராட்டு தெரிவித்ததாகவும் ஆவேஷ் கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Well bowled and keep up the good work -Dhoni hails Avesh Khan
Story first published: Thursday, April 22, 2021, 19:40 [IST]
Other articles published on Apr 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X