சைலண்ட்டாக சம்பவம் செய்த சுட்டி குழந்தை.. 12 சிக்சருடன் 174 ரன்கள்.. 18 வயதேயான ரியான் பராக்கா இது!

அகமதாபாத்: ஜம்மு - காஷ்மீர் அணிக்கு எதிராக 116 பந்துகளில் 12 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 174 ரன்கள் விளாசிய ரியான் பராக்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவின் பிரபலமான உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே கோப்பை கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில் முதல் போட்டியில் இருந்தே அபாரமாக விளையாடி வந்த தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் அசாம் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக முன்னேறின.

ஒரே ஓவரில் 43 ரன்களா.. ருதுராஜ் கெயிக்வாட் படைத்த உலக சாதனை..வாயடைத்துப்போன எதிரணி.. எப்படி நடந்தது ஒரே ஓவரில் 43 ரன்களா.. ருதுராஜ் கெயிக்வாட் படைத்த உலக சாதனை..வாயடைத்துப்போன எதிரணி.. எப்படி நடந்தது

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் - அசாம் அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜம்மு - காஷ்மீர் அணி, 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஷுபம் கஜூரியா 120, ஹெனன் நசீர் 124 ரன்கள் சேர்த்தனர். இதனால் அசாம் அணிக்கு 351 என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ரியான் பராக் அதிரடி

ரியான் பராக் அதிரடி

இந்த நிலையில் அசாம் அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ரியான் பராக் - ரிஷவ் தாஸ் களத்திற்குள் நுழைந்தனர். ரிஷவ் தாஸ் நிதானமாக விளையாட, ரியான் பராக் பட்டாசு போல் வெடிக்க தொடங்கினார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும், சிக்சருமாய் பந்து பறந்து கொண்டு இருந்தது.

12 சிக்சர், 12 பவுண்டரி

12 சிக்சர், 12 பவுண்டரி

இதன் பலனாக 77 பந்துகளில் ரியான் பராக் சதம் விளாசி அசத்தினார். 30 ஓவர்களிலேயே அசாம் அணி 240 ரன்களை கடந்தது. இறுதியாக 12 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 116 பந்துகளில் 174 ரன்கள் எடுத்து ரியான் பராக் ஆட்டமிழந்தார். 351 என்ற இமாலய இலக்கை, அசாம் அணி 46வது ஓவரிலேயே எட்டி, விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது.

ரியான் பராக் பந்துவீச்சு

ரியான் பராக் பந்துவீச்சு

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கி சில அதிரடி சிக்சர்களையும், அசால்ட்டாக கேட்ச் பிடித்து குழந்தைத்தனமாக கொண்டாட்டத்தில் ஈடுபடும் அதே ரியான் பராக் தான் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் அணியின் சிறந்த பந்துவீச்சாளரின் ரன் ரேட் 7 ஆக இருக்கும் போது, ரியான் பராக் 6 ரன் ரேட்டில் வீசி அசத்தியுள்ளார்.

ருதுராக் கெயிக்வாட்

ருதுராக் கெயிக்வாட்

ருதுராஜ் கெயிக்வாட்டின் சாதனையை பார்த்த கண்கள், ரியாக் பராக்கின் அதிரடியை பார்க்காமல் கடந்துள்ளது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களில் பெரும்பாலானோர் தொடக்க வீரர்களாகவே உள்ளனர். இதனால் அண்மைக் காலமாக அந்தந்த பொசிஷனில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் அதிகம் எழுந்துள்ளன. ஆனால் இதுவரை ரியான் பராக் இந்தியா ஏ அணியில் கூட இடம்பெறவில்லை.

 தேர்வுக் குழுவின் கண்கள்

தேர்வுக் குழுவின் கண்கள்

21 வயது 18 நாட்களே ஆகும் ரியான் பராக் களத்தில் இவ்வளவு முதிர்ச்சியுடன் செயல்படுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. தோனியை ரோல் மாடலாக வைத்திருக்கும் ரியான் பராக், தோனியை போலவே தனியாளாக தன் மாநில கிரிக்கெட்டை தூக்கி நிற்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் ஏராளமான வீரர்கள் பக்கம், தேர்வுக் குழுவினரின் கண்கள் எப்போது திரும்பும் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Riyan Parag smashed 174 runs from just 116 balls including 12 fours and 12 sixes while chasing 351 runs in the Vijay Hazare Quarter-Final
Story first published: Tuesday, November 29, 2022, 0:29 [IST]
Other articles published on Nov 29, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X