For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை

மும்பை: ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புதிய கேப்டன் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மாவுக்கு நேற்று தான் கொரோனா பாசிட்டிவ் என சோதனையில் தெரியவந்தது, இதனையடுத்து 3 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை மீண்டும் அவருக்கு ஆர்டி பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. இதில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார்.

ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது?? ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??

கோலி கேப்டன்

கோலி கேப்டன்

5வது டெஸ்ட் வரும் 1ஆம் தேதி பிர்மிங்காமில் தொடங்குகிறது. அதற்குள் ரோகித் சர்மாவுக்கு அணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டால், இந்திய அணி புதிய கேப்டனை வைத்து தான் விளையாடும். அது ரிஷப் பண்ட்டாக இருக்கலாம் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது கோலி தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.

பும்ராவுக்கு வாய்ப்பு

பும்ராவுக்கு வாய்ப்பு

இதனால், அவரது பெயரும் பரிசீலினையில் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இந்திய டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு தான் அந்த பொறுப்பு என தெரியவந்துள்ளது. சிறு விடுமுறைக்கு பிறகு திரும்பியுள்ள பும்ரா, எதிர்பார்த்த அளவு பயிற்சி ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சிக்கல் உள்ளது

சிக்கல் உள்ளது

ஆனால், விராட் கோலியின் விக்கெட்டை பும்ரா தான் வீழ்த்தினார். பும்ராவுக்கு கிரிக்கெட் அறிவு இருக்கிறது, நிச்சயம் அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று ரோகித் சர்மா அண்மையில் பாராட்டினார். ஆனால், பந்துவீச்சாளர்களை கேப்டனாக நியமிப்பதில் சிக்கல் உள்ளது. பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும், ஓய்வு தேவைப்படும் இதனால் கேப்டன் பொறுப்புக்கு பெரும்பாலான அணிகள் பேட்ஸ்மேன்களையே தேர்வு செய்யும்.

டிராவிட்க்கு வேதனை

டிராவிட்க்கு வேதனை

இந்த நிலையில், பயிற்சியாளர் டிராவிட்க்கு தான் இது பொரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்பு ஏற்ற 8 மாதத்தில் 6 வெவ்வேறு கேப்டனுடன் செயல்பட்டு விட்டதாக தெரிவித்த டிராவிட், கொரோனா காலத்தில் இப்படி நடைபெறுவதை தவிர்க்க முடியாது. ஆனால் இது சவாலான காரியமாக மாறிவிட்டது என்று டிராவிட் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 26, 2022, 16:50 [IST]
Other articles published on Jun 26, 2022
English summary
Rohit sharma corona update – Who will be captain for team india vs Eng 5th test ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X