For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திரும்பவும் காயம் ஏற்பட்டால் அவ்வளவுதான்... மீண்டும் விளையாடறத தள்ளிபோடறது நல்லது.. ரவிசாஸ்திரி

துபாய் : இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டால் ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும், அதனால் அவர் போட்டிகளில் பங்கேற்பதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. இந்நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டே அவர் அணியில் இடம்பெறவில்லை என்றும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா -ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்... வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரம் இந்தியா -ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்... வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரம்

காயம் காரணம்

காயம் காரணம்

ஐபிஎல் போட்டிகளின் இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் மும்பை இந்திய.ஸ் அணயின் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. மாறாக அணியின் கேப்டனாக கீரன் பொல்லார்ட் பொறுப்பேற்றுள்ளார். இதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் ரோகித் பெயர் இடம்பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளின் இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் மும்பை இந்திய.ஸ் அணயின் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. மாறாக அணியின் கேப்டனாக கீரன் பொல்லார்ட் பொறுப்பேற்றுள்ளார். இதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் ரோகித் பெயர் இடம்பெறவில்லை.

பொல்லார்ட் நம்பிக்கை

பொல்லார்ட் நம்பிக்கை

ரோகித் சர்மா வலைபயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அவர் அணியில் இடம்பெறுவார் என்றும் கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் அணியில் இடம்பெறுவதற்காக அணி வீரர்கள் உற்சாகத்துடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரவி சாஸ்திரி அச்சுறுத்தல்

ரவி சாஸ்திரி அச்சுறுத்தல்

இந்நிலையில் ரோகித்திற்கு மீண்டும் காயம் ஏற்பட்டால் அது ஆபத்தாக முடியும் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் மீண்டும் விளையாடுவதை சிறிது காலத்திற்கு தள்ளி போட வேண்டும் என்றும் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தேர்வாளர்கள் முடிவு

தேர்வாளர்கள் முடிவு

அவரது மருத்துவ அறிக்கையை பரிசீலித்த பின்பே தேர்வாளர்கள் அவரை ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்காமல் விட்டதாகவும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். தான் கடந்த 1991ல் மருத்துவர்கள் எச்சரிக்கையையும் மீறி ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்றதால் தன்னால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் ஓய்வு அறிவித்ததை சுட்டிக் காட்டிய ரவி சஸ்திரி அதே தவறை ரோகித் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

புறக்கணித்த ரவி சாஸ்திரி

புறக்கணித்த ரவி சாஸ்திரி

தான் மருத்துவர்கள் ஆலோசனையை கேட்டு ஓய்வு எடுத்துவிட்டு பின்பு ஆடியிருந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆடியிருந்திருக்க முடியும். ஆனால் வீம்புக்கென தான் உடனடியாக போட்டிகளில் பங்கேற்றதால், தன்னால் தொடர்ந்து ஆட முடியாமல் போனதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆஸி. தொடரில் இடம்பெறாத வீரர்கள்

ஆஸி. தொடரில் இடம்பெறாத வீரர்கள்

ரோகித் மற்றும் இஷாந்த் சர்மா போன்றவர்கள் கடந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க தொடர்களில் மிக சிறப்பான பங்காற்றியதை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறவில்லை என்றாலும் எதிர்காலத்தில் சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துளளார்.‘

Story first published: Sunday, November 1, 2020, 18:41 [IST]
Other articles published on Nov 1, 2020
English summary
Both Ishant and Rohit will be missed in Australia -Ravi Shastri
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X