வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி.. பிசிசிஐ மீது ரோகித் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டு.. இது தான் காரணமா?

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பெரும்பாலான பகுதியில் விளையாடவில்லை.

இதேபோன்று தீபக்சாகர் காயம் காரணமாக வெறும் மூன்று ஓவர்களை மட்டுமே வீசினார். எனினும் இருவரும் காயத்தை பொருட்படுத்தாமல் பேட்டிங்கிற்கி வந்து விளையாடினார்கள்.

 கடைசி வரை போராடிய இந்தியா.. காயத்தையும் மீறி ரோகித் அதிரடி அரைசதம்.. தொடரை வென்ற வங்கதேசம் கடைசி வரை போராடிய இந்தியா.. காயத்தையும் மீறி ரோகித் அதிரடி அரைசதம்.. தொடரை வென்ற வங்கதேசம்

மிகப்பெரிய தவறு

மிகப்பெரிய தவறு

இதில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, தமக்கு விரலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை. அதனால்தான் பேட்டிங் செய்ய வந்தேன். நீங்கள் ஒரு போட்டியில் தோல்வியை தழுவினால் அதில் நல்ல விஷயங்களும் இருக்கும், பாதகமான விஷயங்களும் இருக்கும். 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு 270 ரன்கள் அடிக்கவிட்டது எல்லாம் மிகப்பெரிய தவறு.

பிரச்சினை எங்கு?

பிரச்சினை எங்கு?

எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் போட்டியின் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசுகிறோம். ஆனால் மிடில் ஓவர்களிலும் , கடைசி கட்டத்திலும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குகிறார்கள். இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த குறைகளை நாங்கள் எப்படி நிவர்த்தி செய்வது என்பது குறித்து பார்க்க வேண்டும். முஹம்மதுல்லா, மெஹதி ஹசன் சிறப்பாக விளையாடினார்கள்.

பார்ட்னர்ஷிப் முக்கியம்

பார்ட்னர்ஷிப் முக்கியம்

எங்களால் அந்தப் பாட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை. ஒரு நாள் கிரிக்கெட்டில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது முக்கியம். நீங்கள் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தால் அதை எப்படி 110, 120 ரன்கள் ஆக மாற்ற வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய அணி வெற்றி பெறும். ஏனென்றால் புதிய வீரர்கள் களத்தில் வந்து விளையாடுவது அவ்வளவு எளிது கிடையாது.

பரபரப்பு குற்றச்சாட்டு

பரபரப்பு குற்றச்சாட்டு

எங்கள் அணியில் வீரர்களுக்கு சில காயம் பிரச்சனைகள் இருக்கிறது. இதன் அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டும். ஏனென்றால் வீரர்கள் முழு உடல் தகுதி இல்லாமல் அணியில் விளையாடுகிறார்கள். அப்படி இருந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது .இந்திய அணிக்காக விளையாடும்போது 100% உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். இது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் அமர்ந்து ஏன் வீரர்கள் முழு உடல் தகுதி பெறாமல் அணிக்கு வருகிறார்கள் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

கண்காணிக்க வேண்டும்

வீரர்களும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. அவர்களுடைய பனிச்சுமையும் நாம் கண்காணிக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா கூறினார். அக்சர்பட்டேல் , தீபக்சாகர் குல்திப் சென், ரிஷப் பந்து போன்ற வீரர்கள் காயம் ஏற்பட்டும் அணியில் இடம்பெற்றிருந்தனர். இதனால் சரியான அணியை தேர்வு செய்ய முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவும் நிலை ஏற்படுகிறது .இதனால் முழு உடல் தகுதியைப் பெற்ற பிறகு வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே பிசிசிஐ மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit sharma slams BCCI For selecting unfit players to indian team வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி.. பிசிசிஐ மீது ரோகித் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டு.. இது தான் காரணமா?
Story first published: Wednesday, December 7, 2022, 20:57 [IST]
Other articles published on Dec 7, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X