For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் டக்.. யுவராஜ் 1 ரன்.. குறி வைத்து தூக்கிய இலங்கை ஜாம்பவான்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

மும்பை : இந்தியா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் இடையே ஆன டி20 போட்டியில் சச்சின், யுவராஜ் சிங் விக்கெட்டை இலங்கை அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் குறி வைத்து வீழ்த்தினார்.

Recommended Video

Road Safety T20 series | IND vs SL | Irfan Pathan helps made India Legends to win

அதைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிலும் சச்சின் டக் அவுட் ஆனார். யுவராஜ் சிங் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

இந்திய அணியின் அடித்தளத்தை ஆட்டிப் படைத்தார் அந்த இலங்கை வேகப் பந்துவீச்சாளர்.

லெஜண்ட்ஸ் டி20 போட்டி

லெஜண்ட்ஸ் டி20 போட்டி

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்று வரும் ஐந்து நாடுகளின் ஜாம்பவான் வீரர்கள் மோதும் லெஜண்ட்ஸ் டி20 தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் இந்திய அணியின் கேப்டன் சச்சின் டாஸ் வென்றார்.

சச்சின் டாஸ் வென்றார்

சச்சின் டாஸ் வென்றார்

சச்சின் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. எனினும், சமிந்தா வாஸ் அணியில் இடம் பெற்று இருந்தார்.

நல்ல துவக்கம்

நல்ல துவக்கம்

இலங்கை அணிக்கு கேப்டன் திலகரத்னே தில்ஷன், கலுவிதரானா நல்ல துவக்கம் அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தனர். அட்டப்பட்டு 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன் எடுத்தனர்.

மூன்று ஃபோர்

மூன்று ஃபோர்

தில்ஷன் 23, கலுவிதரானா 21, காபுகேத்ரா 23, செனநாயகே 19 எடுத்தனர். 20வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளை சந்தித்த 10ஆம் வரிசை வீரர் ரங்கனா ஹெராத் மூன்று ஃபோர் அடித்து அணிக்கு பெரிய அளவில் உதவி செய்தார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இலங்கை அணி 20 ஓவர்களில் 138 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சச்சின், சேவாக், யுவராஜ் சிங், கைப் என நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இலங்கை அணியை எளிதாக சேஸிங்கில் வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சச்சின் டக் அவுட்

சச்சின் டக் அவுட்

ஆனால், முதல் ஓவரிலேயே ஷாக் கொடுத்தார் இலங்கை அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ். போட்டியின் மூன்றாவது பந்தில் சச்சின் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அவர் இரண்டு பந்துகள் மட்டுமே சந்தித்தார்.

சேவாக் ஏமாற்றம்

சேவாக் ஏமாற்றம்

அடுத்து சேவாக் மோசமான முறையில் ரன் அவுட் ஆனதைக் கண்டு அதிர்ந்த ரசிகர்கள், எப்படியும் யுவராஜ் சிங், கைப் இணைந்து அணியைக் காப்பார்கள் என நம்பினர். ஆனால், ஐந்தாவது ஓவரில் மீண்டும் வாஸ் அதிர்ச்சி அளித்தார்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

மூன்று பந்துகளை சந்தித்த நிலையில், யுவராஜ் சிங் 1 ரன் மட்டுமே எடுத்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி 19 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

உறைய வைத்த ஹீரோக்கள்

உறைய வைத்த ஹீரோக்கள்

குறிப்பாக சச்சின் டக் அவுட் ஆன போதே பலர் மனம் உடைந்தாலும், சேவாக் ரன் அவுட், யுவராஜ் சிங் கேட்ச் என அடுத்தடுத்த ஓவர்களில் தங்களின் அனைத்து "ஹீரோ"க்களும் வரிசையாக வெளியேறியது அவர்களை தொடர்ந்து அதிர்ச்சியில் உறைய வைத்தது.

கைப் நிதானம்

கைப் நிதானம்

கைப் நிதான ஆட்டம் ஆடினாலும், நிலைத்து நின்று ஆடியது மட்டுமே இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இந்திய அணியில் முனாப் பட்டேல் 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 10, 2020, 22:58 [IST]
Other articles published on Mar 10, 2020
English summary
Sachin gone for duck out in legends match. Yuvraj Singh just scored 1 run in this match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X