For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2011 உலகக் கோப்பை.. கோலியிடம் சொன்ன 'ரகசியம்' - போட்டுடைத்த சச்சின்

மும்பை: 2011ல் உலகக் கோப்பையை வென்ற தருணம் ஒவ்வொரு இந்தியனும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். அப்போது, கோப்பையை வென்ற பிறகு தான் கோலியிடம் என்ன சொன்னேன் என்ற ரகசியத்தை சச்சின் இப்போது போட்டுடைத்து இருக்கிறார்.

ரிசர்வு டே முறையில் மாற்றம்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சமனில் முடிந்தால் என்ன நடக்கும்?ரிசர்வு டே முறையில் மாற்றம்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சமனில் முடிந்தால் என்ன நடக்கும்?

2011ல் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி இலங்கையை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

தோனியின் வின்னிங் சிக்ஸ், ரவி சாஸ்திரியின் கமென்டரி, வந்தே மாதரம் பாடல் ஒலித்த தருணம் என்று அன்றைய தினத்தை எவருமே மறந்திருக்க முடியாது.

ஏமாற்றிய சச்சின்

ஏமாற்றிய சச்சின்

முதலில் பேட்டிங் செய்த இலங்கை மஹேலா ஜெயவர்தனேவின் 103 ரன்கள் உதவியுடன் 274 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய இந்திய அணியில் சேவாக் 0 ரன்னிலும், சச்சின் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக, மும்பை வான்கடே மைதானத்தில், ஆயிரக்கணக்கான சொந்த ரசிகர்கள் முன்னிலையில் கிடைத்த அருமையான வாய்ப்பை சச்சின் தவறவிட்டார். மலிங்கா ஓவரில் அவர் அவுட்டான போது, ஒட்டுமொத்த மைதானமும் Pin Drop Silence ஆனது.

தோனி மீது பிரஷர்

தோனி மீது பிரஷர்

ஆனால், அதன் பிறகு விராட் கோலியின் பயமறியா 35 ரன்கள், கவுதம் கம்பீரின் அபாரமான 97 ரன்களும் இந்திய ரசிகர்களுக்கு, 'இன்னமும் கப் கைய விட்டு போகல' என்ற நம்பிக்கையை கொடுத்தது. கம்பீர் அவுட்டான போது, மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. ஏனெனில், கேப்டன் தோனி, உலகக் கோப்பைத் தொடரின் இதர போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. ஆகையால், அவர் மீது ஏகப்பட்ட பிரஷர் இருந்தது. ஆனால், மறுபக்கம் யுவராஜ் மீது ரசிகர்கள் வைத்திருந்தனர்.

கோப்பை கைவசம்

கோப்பை கைவசம்

எனினும், நின்னு நிதானமாக விளையாடிய தோனி, தனது அரைசதம் வரை கப்சிப் மோடில் விளையாடி, பிறகு கியரை மாற்ற, இலங்கை பவுலர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மலிங்காவே பந்து வீச வந்து அடி வாங்கிச் சென்றார். இறுதியில், குலசேகரா பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு, தோனி கோப்பையை ஏந்தியதை வரலாறு சொல்லும். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே சச்சினின் பெருங்கனவாக இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்தது தோனி ஆர்மி.

வலி பெரிதல்ல

வலி பெரிதல்ல

போட்டி முடிந்த பிறகு, சச்சினை தங்கள் தோளில் சுமந்த விராட் கோலியும், யூசுப் பதானும் மைதானம் முழுக்க சுற்றி வந்தனர். அப்போது கோலியிடம், 'இவ்வளவு தூரம் அவரை சுமந்தீர்களே, கை வலிக்கவில்லையா?' என்று கேட்டதற்கு, இத்தனை வருடங்கள் இந்திய அணியை தன் தோளில் சுமந்தவரின் வலியை விட, இந்த வலி பெரிதல்ல' என்றார் நெகிழ்ச்சியோடு.

சச்சின் சொன்ன ரகசியம்

சச்சின் சொன்ன ரகசியம்

இந்நிலையில், யூடியூப் ஷோ ஒன்றில் பேசிய சச்சின், அன்றைய மகத்தான தினம் குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "வெற்றிப் பெற்றவுடன் கோலியும், யூசுப் பதானும் என்னை தூக்கி தோளில் வைத்தார்கள். அப்போது அவர்களிடம், 'நான் கீழே விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னேன் என்ற பரம ரகசியத்தை சச்சின் வெளியிட்டுள்ளார்.

Story first published: Tuesday, May 18, 2021, 18:42 [IST]
Other articles published on May 18, 2021
English summary
Sachin Tendulkar Winning 2011 World Cup -சச்சின் டெண்டுல்கர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X