பாலியல் தொல்லை.. ஆடை மாற்றம்.. ரசிகர்களின் கிண்டல்.. ஐபிஎல் சியர் லீடர்களுக்கு நடக்கும் கொடுமைகள்

Posted By:
ஐபிஎல் போட்டிகளுக்கு நடனமாடும் பெண்களுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள்

சென்னை: ஐபிஎல் போட்டியில் சியர் லீடர்களாக வேலை செய்யும் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்ற உண்மை வெளியாகி இருக்கிறது. தனியார் இணையதள அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இந்த உண்மைகள் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரில் வீரர்கள் எந்த அளவிற்கு வைரலோ, அந்த அளவிற்கு சியர் லீடர்களும் வைரல்தான். சிக்ஸ், பவுண்டரி அடிக்கும் போது, சிரித்துக் கொண்டே இவர்கள் நடனமாடுவார்கள். ஆனால் இவர்களின் சிரிப்பிற்கு பின் பெரிய சோக கதையே இருக்கிறது.

இவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இங்கு வரவழைக்கப்படுகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் கடைசி போட்டி வரை ஒவ்வொரு அணிக்காகவும் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

குறைவான சம்பளம்

குறைவான சம்பளம்

எத்தனை போட்டிகளில் எவ்வளவு நேரம் ஆடினாலும், மிகவும் குறைவான சம்பளம் கொடுக்கப்படுவதாக இந்த சியர் லீடர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். சம்பளத்தை விட, மோசமான லாட்ஜ் ஒன்றை எடுத்து அதில் தங்க வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். முக்கியமாக இவர்கள் இந்திய மதிப்பில் கொடுக்கும் பணம், அமெரிக்க மதிப்பில் மிக மிக குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

மேலும், சில அணி நிர்வாகிகள், பெரிய நபர்கள், அவர்களின் நண்பர்கள் அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக கூறியுள்ளனர். சமயங்களில் சில கிரிக்கெட் வீரர்கள் கூட இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த இணையதள ஆய்வில் அவர்கள் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. பெரிய நிர்வாகிகள்தான் இப்படி செய்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

மோசமான நிற வெறி

மோசமான நிற வெறி

மூன்று சியர் லீடர்கள் இருந்தால், அதில் ஒருவர் சமயங்களில் இந்திய பெண்ணாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவருக்கு அளிக்கப்படும் சம்பளம் வெளிநாட்டு பெண்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தை விட குறைவு என்று கூறப்படுகிறது. இந்த துறையில் கூட அதிக அளவில் நிறவெறி இருக்கிறது என்று இந்திய சியர் லீடர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.

மோசமான உடை

மோசமான உடை

முன்பெல்லாம் கொஞ்சம் நல்ல உடை கொடுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஐபிஎல் குழுமத்தில் உள்ள பெரிய தலை ஒருவரின் 16 வயது மகள், பேஷன் டிசைனர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு, இப்போது புதிய உடைகளை இவர்களுக்கு வடிவமைத்து கொடுத்துள்ளார். இந்த உடையை வைத்து சரியாக எழுந்து நடக்க கூட முடியவில்லை, எப்படி ஆடுவது என்று இவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

ரசிகர்களின் கேலி

ரசிகர்களின் கேலி

வீரர்கள், நிர்வாகிகள் போக ரசிகர்களும் பாலியல் ரீதியாக கிண்டல் செய்வதாக இவர்கள் கூறியுள்ளனர். ரசிகர்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டு, பாலியல் ரீதியாக கத்தி கூச்சல் போடுவார்களாம். மோசமான சைகை காட்டுவார்களாம். போட்டோ எடுத்து அதை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் கூட கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படி கிடையாது

இப்படி கிடையாது

ஆனால் இவர்கள் கலந்து கொள்ளும் அமெரிக்க கால்பந்து, ரஹ்பி போன்ற தொடர்களில் எல்லாம் இப்படி பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளனர். அங்கு ஆண்கள் இப்படி தங்களை போக பொருளாக பார்ப்பதில்லை, தங்களை ஒரு கலைஞராக மட்டுமே பார்க்கிறார்கள் என்று இவர்கள் புலம்பி இருக்கிறார்கள்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Sad off the camera life of every IPL cheerleader girls.
Story first published: Tuesday, April 17, 2018, 11:15 [IST]
Other articles published on Apr 17, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற